இந்தியாவின் மின் வினியோக நிலையங்களை உளவு பார்க்கும் சீனா - அமெரிக்கா தகவல்
இந்தியாவின் மின் வினியோக நிலையங்களை உளவு பார்க்கும் சீனா - அமெரிக்கா தகவல்
இந்திய மின் கிரிட்களை வேவு பார்க்கும் சீனா
நாட்டில் பல பகுதிகளில் ஒருங்கிணைந்த மின் செயல்பாடுகளை கண்காணிக்கும் இந்திய மின்வினியோக மையங்களை சீனா தீவிரமாக உளவு பார்ப்பதாக அமெரிக்கா புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளது.
நாட்டில் பல பகுதிகளில் ஒருங்கிணைந்த மின் செயல்பாடுகளை கண்காணிக்கும் இந்திய மின்வினியோக மையங்களை சீனா தீவிரமாக உளவு பார்ப்பதாக அமெரிக்கா புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளது.
லடாக் அருகே உள்ள மின்சார விநியோக மையங்களை குறிவைக்க சீன ஹேக்கர்களால் இரண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அது வெற்றியடையவில்லை... இதுபோன்ற இணைய தாக்குதல்களை எதிர்கொள்ள எங்கள் பாதுகாப்பு அமைப்பை நாங்கள் ஏற்கனவே பலப்படுத்தியுள்ளோம்," என்று மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கூறியதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உயர்தர இணையத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் ஒரு பெரிய எரிவாயு குழாய் மீது ransomware தாக்குதலால் பாதிக்கப்பட்டனர், அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவின் ஒரு பெரிய பகுதி முக்கியமான ஆற்றல் வலைப்பின்னல் தாக்கப்பட்ட போது மின்சாரத்தை இழந்திருக்கும் அபாயமும் ஏற்பட்டது.
இந்நிலையில் வட இந்தியாவில் மின்ஆற்றல் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்கள் ஒருங்கிணைந்த மின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பணியை மேற்கொள்கின்றன. இவற்றில் வட இந்தியாவில் உள்ள 7 மின்வினியோக மையங்களை, சீன அரசுடன் தொடர்புடைய சைபர் குழுக்கள் இலக்காக வைத்து செயல்பட்டு உள்ளன என அமெரிக்காவை அடிப்படையாக கொண்டு இயங்க கூடிய ரெக்கார்டட் பியூச்சர் என்ற அமைப்பு தெரிவித்து உள்ளது.
சீனாவின் இந்த இலக்கானது வடஇந்தியாவை நோக்கி இருந்துள்ளது. லடாக்கில் உள்ள இந்திய-சீன எல்லை பகுதிகளை கண்காணிக்கும் வகையில் இது அமைந்துள்ளது என தெரிவித்து உள்ளது. எனினும் சரியான இடங்களை அந்த அமைப்பு அடையாளம் காட்டவில்லை.
இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த ரகசிய தகவல் சேகரிப்பு பணியானது கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு 27ந்தேதியில் இருந்து நடப்பு 2022ம் ஆண்டு மார்ச் 15ந்தேதி வரை தொடர்ந்து செயல்பாட்டில் இருந்துள்ளது.
பன்னாட்டு தளவாட நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனம் ஒன்று மற்றும் தேசிய அவசரகால பொறுப்பு அமைப்பு ஆகியவையும் இந்த தாக்குதல்களுக்கு இலக்காக கொள்ளப்பட்டு உள்ளன.
இதற்காக இன்டர்நெட் புரோட்டோகால் கேமிராக்கள், சி.சி.டி.வி. நெட்வொர்க்குகள் மற்றும் இணையதளம் வழியே இயங்கும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டிங் உபகரணங்கள் ஆகியவற்றை ரகசிய முறையில் சீனா பயன்படுத்தி உள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் இந்திய பவர் கிரிட் சொத்துக்களை குறிவைப்பதற்கான சீனாவின் ஒருங்கிணைந்த முயற்சி எங்கள் கண்ணோட்டத்தில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் தனித்துவமானது என்று கருதுகிறோம் மேலும் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் எல்லை தகராறுகளைக் கருத்தில் கொண்டு, இது கவலையளிக்கக் கூடியது என்று கருதுவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.