லடாக் எல்லை அருகே 3 மொபைல் டவர்களை சீனா ஏற்படுத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு வரும் நிலையில், எல்லைப் பகுதியில் கட்டமைப்பு பணிகளை சீனா மேற்கொள்கிறது. 'பாங்கோங் ஏரி மீது பாலத்தை கட்டி முடித்துள்ள நிலையில், எல்லைக்கு மிக அருகாமையில் 3 மொபைல் டவர்களை ஏற்படுத்தியுள்ளது' என்று உள்ளூர் கவுன்சிலர் கொன்சோக் ஸ்டான்சின் தெரிவித்துள்ளார். இவர் லடாக்கின் லே மாவட்டத்தில் உள்ள தர்புக் தாலுகாவில் அமைந்திருக்கும் சுஷூல் பகுதியின் கவுன்சிலர் ஆவார்.
இதையும் படிங்க - டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறிவிட்டீர்களா? பதறாதீங்க- இதைப் பண்ணா போதும்
ட்விட்டரில் இந்த தகவலை பகிர்ந்துள்ள கொன்சோக், எல்லை அருகேயுள்ள கிராமங்களில் 4ஜி டவர்களை மத்திய அரசு ஏற்படுத்தி தரவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் ஏரி மீது சட்டவிரோதமாக கட்டுமான பணிகளை சீனா மேற்கொண்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறியுள்ளது.
இதையும் படிங்க - தொடரும் ஒலிப்பெருக்கி சர்ச்சை: ஸ்பீக்கரில் மக்கள் பிரச்னைகளை ஒலிபரப்பி கவனம் ஈர்த்த சமாஜ்வாடி உறுப்பினர்
கடந்த 60 ஆண்டுகளாக சீனா ஆக்கிரமித்து வைத்திருக்கும் பகுதியில் பாலம் அமைக்கப்படுவதாக வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியிருந்தார். இந்தப் பாலம் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை இணைப்பதாக உள்ளது. இதனைப் பயன்படுத்தி சீனா தனது ராணுவத்தை விரைந்து அனுப்ப முடியும். 2 ஆண்டுகளுக்கு முன்பாக லடாக் எல்லையில் சீனா மற்றும் இந்திய ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டு, பின்னர் முற்றுகை கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.