அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை சீன ராணுவத்தினர் கடத்திச் சென்றுவிட்டதாக அம்மாநில எம்.பி தெரிவித்துள்ளார்.
சீனாவை ஒட்டிய அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தின் சிடோ எனும் கிராமத்தைச் சேர்ந்த மிராம் தாரோன் என்ற 17 வயது சிறுவன், ஜாணி யாயிங் என்ற தனது நண்பருடன் சேர்ந்து இந்திய - சீன எல்லையை ஒட்டிய லுங்டா ஜோர் பகுதியில் Tsangpo நதியில் வேட்டையாடுவதற்காக சென்றிருந்த நிலையில், அங்கு வந்த சீன ராணுவத்தினர் திடீரென மிராம் தாரோன் மற்றும் ஜாணி யாயிங் (வயது 27) ஆகிய இருவரையும் சிறை பிடிக்க முயற்சித்துள்ளனர்..
இருப்பினும் சுதாரித்துக் கொண்ட ஜாணி யாயிங், சீன ராணுவத்தினரின் பிடியில் இருந்து தப்பியோடி வந்து மிராம் தாரோன் சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்ட விவரத்தை சக கிராமத்தினரிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்.
Also read: மகளிடம் பேசிய திருமணமான இளைஞரை கொலை செய்த பக்கத்து வீட்டு குடும்பத்தினர்
இச்சம்பவம் குறித்து கிழக்கு அருணாச்சல் பிரதேசம் தொகுதியின் எம்.பி தபிர் காவோ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் கடத்தப்பட்ட சிறுவனை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய உள்துறை இணையமைச்சர் நிசித் பிரமானிக்கிடம் இச்சம்பவம் குறித்து விளக்கியிருப்பதாகவும், அவரிடம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்வீட்டில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவம் போன்றோரை டேக் செய்துள்ளார்.
Also read: தந்தையின் வக்கிரம்.. மகனுடன் சேர்ந்து மகளை பலாத்காரம் செய்த கொடூரம்..
Tsangpo நதி இந்தியாவில் நுழையும் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இந்த நதி அருணாச்சல் பிரதேசத்தில் சியாங் என அழைக்கப்படுகிறது. இதுவே அசாமில் பிரம்மபுத்திரா நதி என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சீன ராணுவத்தால் அருணாச்சல பிரதேசத்தில் இளைஞர்கள் சிறைபிடிக்கப்படுவது இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் கிடையாது. முன்னதாக கடந்த 2020ம் ஆண்டில் அப்பர் சுபன்சிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் சீன ராணுவத்தால் கடத்தப்பட்ட நிலையில் ஒருவாரம் கழித்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
Also read: இண்டிகோ விமானங்கள் நடுவானில் மோத இருந்த விபரீதம்
லடாக்கில் இருந்து அருணாச்சல் பிரதேசம் வரையில் 3,400 கிமீ நீள எல்லையை இந்தியா சீனாவுடன் பகிர்ந்து கொள்கிறது. எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருவது கவனிக்கத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.