டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது மிளகாய்பொடி வீசிய மர்ம நபர்!

கடந்த காலங்களில் கெஜ்ரிவால் மீது காலணி வீச்சு, மை வீச்சு போன்றவை நடந்துள்ளன.

news18
Updated: November 20, 2018, 6:55 PM IST
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது மிளகாய்பொடி வீசிய மர்ம நபர்!
அரவிந்த் கெஜ்ரிவால்
news18
Updated: November 20, 2018, 6:55 PM IST
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்பொடி வீசிய மர்ம நபரை போலீஸார் கைது செய்தனர்.

டெல்லி தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வழக்கமான அலுவலில் ஈடுபட்டார். பணி முடிந்து, மதிய உணவு இடைவேளைக்காக அவர் கிளம்பியபோது மர்ம நபர் ஒருவர் கெஜ்ரிவால் மீது  மிளகாய்பொடியை வீசினார்.

அதிர்ச்சியடைந்த கெஜ்ரிவால் சுதாரிக்க முயன்றார். அப்போது அவர் அணிந்திருந்த கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராகவ் சத்தா கூறுகையில், 'இந்த சம்பவம் போலீஸார் வழங்கும் பாதுகாப்பில் உள்ள குறைபாட்டால் நிகழ்ந்துள்ளது. அந்த மர்ம நபர் பயங்கரமான ஆயுதத்தை கொண்டு வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? என்பதை கற்பனை செய்ய முடியவில்லை' என்றார்.

கெஜ்ரிவால் மீது மிளகாய்பொடியை வீசிய நபரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், அந்நபரின் பெயர் அனில் குமார் என்பதும், அவர் மிளகாய்பொடியை தீப்பெட்டியில் எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

நாடகமாடுகிறார் கெஜ்ரிவால்: இதனிடையே இந்தச் சம்பவம் முழுக்க, முழுக்க நாடகம் என்று பாஜக எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் சிர்ஸா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ``ஊடகங்களின் கவனத்தை பெறுவதற்காகவே  அரவிந்த் கெஜ்ரிவால் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதேபோன்று கடந்த காலங்களில் கூட கெஜ்ரிவால் மீது காலணி வீச்சு, மை வீச்சு போன்றவை நடந்துள்ளன. உரிய அனுமதிச் சீட்டு இன்றி யாரும் தலைமை செயலகத்துக்குள் நுழைந்துவிட முடியாது’’ என்றார் மஞ்சிந்தர் சிங்.

 

Also watch

First published: November 20, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...