சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கும் போக்சோ சட்டப்பிரிவு குறித்து இரு நாள் தேசிய கருத்தரங்கு டெல்லியில் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஓய் சந்திரசூட் பங்கேற்றுப் பேசினார்.
இதில் அவர் பேசியதாவது, "குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் என்பது அவர்களின் நீண்ட எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இதை கருத்தில் கொண்டு தான் இதற்கு தீர்வு காண உரிய நேரத்தில் இந்த போக்சோ சட்டத்தை உருவாக்கித் தந்துள்ளனர். அதே வேளை குழந்தைகள் , சிறார்களுக்கு பாலியல் பாதுகாப்பு குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பாக இப்போது குட் டச் மற்றும் பேட் டச் என்று பொதுவாக கூறி வருகின்றனர். ஆனால் நல்ல தீண்டல், கெட்டத் தீண்டல் என்பது சம்பந்தப்பட்ட நபரின் நடத்தையை குறிக்கும் விதத்தில் உள்ளாதல் குழந்தைகளுக்கு அதை கூறுவதில் உளவியல் பிரச்னை உள்ளது. எனவே, குழந்தைகள் வெளியே சொல்வதற்கு அச்சப்படுவார்கள். எனவே, இதை பாதுகாப்பான தீண்டல்(Safe touch), பாதுகாப்பு இல்லதா தீண்டல்(Unsafe touch) என்ற விதத்தில் நாம் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக பாலியல் வன்முறைகளை வெளியே சொன்னால் குடும்ப கவுரவம் கெட்டுப்போகும் என்ற பயத்தை நாம் முதலில் நீக்க வேண்டும்.
குழந்தைகளின் நலன்தான் பிரதானம் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு அந்த குடும்பத்தில் இருந்து உறவினரே பாலியல் தொல்லை கொடுத்தால் கூட அதை தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும். இத்தகைய புரிதலையும் நம்பிக்கையும் குடும்பத்தினருக்கு அளிக்கும் விதத்தில் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: 11 ஆண்டுகளில் 16 லட்சம் இந்தியர்கள் குடியுரிமையை துறந்து வெளிநாட்டில் குடியேற்றம் - மத்திய அரசு தகவல்
பெண் குழந்தைகள் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவார்கள், ஆண் குழந்தைகளுக்கு தொந்தரவு நேராது என்ற பொது எண்ணத்தை நீக்க வேண்டும். மேலும், பாலியல் குற்றங்களை அந்நிய நபர் மட்டும் தான் செய்வார் என்ற பொது புத்தியையும் நீக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைகளில் இருந்து உரிய தீர்வுகள் கிடைக்கும்" என்று பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chief justice of india, Pocso, Sexual abuse