Home /News /national /

8 மாத குழந்தையை தூக்கி வீசி கொடூர தாக்குதல்.. மூளை காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை.. சிசிடிவியால் சிக்கிய குழந்தை பராமரிப்பாளர்!

8 மாத குழந்தையை தூக்கி வீசி கொடூர தாக்குதல்.. மூளை காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை.. சிசிடிவியால் சிக்கிய குழந்தை பராமரிப்பாளர்!

Child Suffers Brain Injury | குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், குழந்தையின் மூளையில் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Child Suffers Brain Injury | குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், குழந்தையின் மூளையில் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Child Suffers Brain Injury | குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், குழந்தையின் மூளையில் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    குஜராத்தில் குழந்தை பராமரிப்பாளர் பெண் ஒருவர் கோபத்தில் 8 மாத குழந்தையை கொடூரமாக தாக்கியதில், மூளை காயம் அடைந்த குழந்தை மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது. குழந்தை பராமரிப்பாளரின் இந்த செயலால் குழந்தையின் பெற்றோர் நிலைகுலைந்து போயுள்ளனர்.

    குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், குழந்தையின் மூளையில் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக  செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை அதிகரி தேசாய் நடந்த சம்பவம் குறித்து விரிவாக கூறியதாவது, குஜராத் மாநிலம் சுரத்தை சேர்ந்தவர் மித்தேஷ் பட்டேல். இவரும் அவரது மனைவியும் தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக கடந்த செப்டம்பர் மாதம் குழந்தை பராமரிப்பாளரை நியமித்துள்ளனர்.

    இந்நிலையில், நேற்றைய தினம் பட்டேல் தனது அலுவலகத்தில் இருந்த போது அவரது தாயாரிடம் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அதில், இரட்டையர்களில் ஒரு குழந்தை அழுதுக்கொண்டே இருந்ததாகவும், திடீரென மயங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த குழந்தையை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனை அழைத்துச்சென்றுள்ளனர்.

    Also read: சென்னை ஆழ்கடலில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள்!!

    இதனிடையே, பட்டேல் குடும்பத்தினர் வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டுள்ளனர். அதில், குழந்தை பராமரிப்பாளர் அந்த குழந்தையின் காதை திருகி அடித்து துன்புறுத்துவதுடன், குழந்தையை படுக்கையில் தூக்கி வீசும் காட்சிகளை கண்டு அதிர்ந்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து மித்தேஷ் பட்டேல் காவல் நிலையல் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டோம். அதில், கோமல் டெண்டேல்கார் என்ற அந்த குழந்தை பராமரிப்பாளர் குழந்தையை துன்புறுத்துவது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது. தொடர்ந்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் ஒருவித விரக்தியில் உள்ளார் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    குழந்தைகள் மீது பெற்றோர்கள் உரிமை எடுத்துக்கொள்வது தவறு : காரணத்தை விளக்கும் சத்குரு...

    இதனிடையே, மித்தேஷ் பட்டேல் வீட்டில் இரண்டு நாட்கள் முன்பு தான் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதுவும், அக்கம்பக்கத்தினர், குழந்தை பராமரிப்பாளரிடம் குழந்தைகள் இருக்கும் போது, அதிகளவில் அழுகை சத்தம் கேட்பதாக புகார் அளித்ததன் பேரில் மித்தேஷ் சிசிடிவி கேமராவை வீட்டில் பொருத்தியுள்ளார் என்றும் அவர் கூறினார்.

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Baby

    அடுத்த செய்தி