ராணுவத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுமுறை!

news18
Updated: August 11, 2019, 10:50 AM IST
ராணுவத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுமுறை!
கோப்புப் படம்
news18
Updated: August 11, 2019, 10:50 AM IST
மத்திய அரசில் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் குழந்தை பராமரிப்பு விடுமுறை ஆண் ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என்று விதித்திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விதி ராணுவ வீரர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பணியாளர் நலத்துறை பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவரும் குழந்தை பராமரிப்பு விமுறை இனி தனியாக வசிக்கும் ஆண் ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என விதிகளில் திருத்தம் செய்தது. தற்போது இந்த விதிகள் ராணுவத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும் பொருந்தும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, 40 சதவிகிதம் வரை மாற்றுத்திறனுடன் 22 வயது வரை உள்ள குழந்தைகளை பராமரிக்க பெண்களுக்கு 15 நாட்கள் வரை விடுப்பு வழங்கப்பட்டது. இனி, வயது வரம்பில்லாமல் 40 சதவிகிதம் வரை மாற்றுத்திறனுடன் கொண்ட குழந்தைகளை பராமரிக்க பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி தனியாக வசிக்கும் ஆன் ஊழியர்களுக்கும் 5 நாட்கள் விடுப்பு வழங்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.


First published: August 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...