6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை நிர்வாணப்படுத்தி வெளுத்து வாங்கிய பொதுமக்கள்
6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை நிர்வாணப்படுத்தி வெளுத்து வாங்கிய பொதுமக்கள்
மாதிரிப்படம்
Sexual Abuse | ஆந்திர மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை நிர்வானப்படுத்தி சாலையில் அடித்து இழுத்துச்சென்று போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் பொதுமக்கள் பத பதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை சீரழித்த கொடூரனை ஊர்மக்கள் ஒன்றுக்கூடி அடித்து இழுத்துச்செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் பகுதியை சேர்ந்தவர் அந்த 6 வயது சிறுமி. திங்கள் கிழமை மாலை வீட்டு வாசலில் சகோதரியுடன் விளையாடியுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 45 வயதான ஸ்ரீதர் சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து தூக்கிச்சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமியை காணாததால் பெற்றோர் சிறுமியை தேடியுள்ளனர்.
அப்போது சிறுமியின் சகோதரி ஸ்ரீதர் தங்கையை தூக்கி ஒதுக்குப்புறமாக உள்ள பகுதிக்குச்சென்றதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற உறவினர்கள் சென்று பார்த போது பதுங்கியிருந்த ஸ்ரீதரை உறவினர்கள் பிடித்தனர். மேலும் அருகே இருந்தபுதரில் சிறுமி அதிக ரத்தப்போக்குடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனே ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை மீட்ட உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.மேலும் சிக்கிய ஸ்ரீதரை சாலையில் அடித்து தரதரவென இழுத்துச்சென்றுள்ளர். ஆடைகளை களைந்து ஸ்ரீதரை நிர்வாணமாக்கிய ஊர் மக்கள் அவரை அடித்து துவைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்தனர்.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.