ஐஸ்க்ரீம் கொடுத்து குழந்தை கடத்தல்: சோதனைச் சாவடியில் சிக்கிய கணவன், மனைவி..

பெங்களூருவில் இருந்து ஐஸ்க்ரீம் கொடுத்து கடத்தப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தையை கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீசார் மீட்டுள்ளனர். குழந்தையைக் கடத்தி வந்த தம்பதியையும் போலீசார் கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு காரணம் என்ன?

  • Share this:
தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் சோதனைச் சாவடி அருகே செவ்வாய் இரவு ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளுடன் நின்றிருந்தனர். அதில் ஒரு பெண் குழந்தை கதறி அழுது கொண்டே இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு தம்பதியைப் பிடித்து விசாரித்தனர். அவர்களுடன் இருந்த 6 வயது சிறுவனிடமும் விசாரித்தனர். அந்த விசரணையில் தம்பதியின் பெயர் ஜோசப் ஜான் மற்றும் எஸ்தர் லதா என்பது தெரியவந்தது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் காட்டாகடையைச் சேர்ந்தவர் ஜான். ஆந்திர மாநிலம் கல்யாண்பூரைச் சேர்ந்தவர் எஸ்தர்.

25 நாட்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு சென்ற இவர்கள் அங்கு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில், நின்று கொண்டிருந்த இரண்டரை வயது லோகிதாவுக்கு ஐஸ்க்ரீம் கொடுத்து தங்களுடன் அழைத்து வந்துள்ளனர்.இதற்கிடையே லோகிதாவின் தாய் பெங்களூருவில் தன் குழந்தை மாயமானதாகவும் மீட்டுத் தரும்படியும் கோரிக்கை விடுக்கும் வீடியோ, களியக்காவிளை போலீசார் கவனத்திற்கு வந்தது. லோகிதாவின் பெற்றோர் சத்தியமூர்த்தி - கார்த்திகேஸ்வரி தம்பதிக்கு தகவல் தெரிவித்த போலீசார் அவர்களை களியாக்காவிளை வரவழைத்துள்ளனர்.


மேலும், ஜான் - எஸ்தர் தம்பதியுடன் இருந்த மற்றொரு 6 வயது சிறுவன் ஜோபின், ஜானின் முதல் மனைவிக்குப் பிறந்தவர் என்பதும் தெரியவந்தது. லோகிதாவுக்கு ஜான் தம்பதி தயாரித்து வைத்திருந்த போலி ஆதார் அட்டையையும் போலீசார் பறிமுதல்செய்துள்னளர்.

ஜான் - எஸ்தர் தம்பதி, பெண் குழந்தையைக் கடத்தி வந்தது ஏன்? போலி ஆதார் அட்டையைத் தயாரித்தது ஏன்? இவர்களின் பின்னணியில் வேறு எந்த கும்பலும் உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 
First published: October 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading