Home /News /national /

முதலமைச்சரை விட 5 மடங்கு பணக்காரர் ஆன அவரது மகன்!!

முதலமைச்சரை விட 5 மடங்கு பணக்காரர் ஆன அவரது மகன்!!

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைவரும் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைவரும் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைவரும் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.

    பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை விட அவரது மகன் 5 மடங்கு பணக்காரராக உள்ளது தெரியவந்துள்ளது.

    பீகார் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைவரும் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 31ம் தேதி வரையிலான அமைச்சர்களின் சொத்து விவரங்கள் அரசின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

    அதில் முதலமைச்சர் நிதிஷ் குமாரிடம் ரொக்கமாக 29,385 ரூபாயும், வங்கிக் கணக்கில் 42,763 ரூபாயும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மகன் நிஷாந்திடம் ரொக்கமாக 16,000 ரூபாயும், வங்கிக் கணக்கில் 1 கோடியே 28 லட்சம் ரூபாயை வைப்பு நிதியாக வைத்துள்ளார்.

    நிதிஷ் குமாரின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 75 லட்சமாக உள்ள நிலையில், அவரின் மகனின் சொத்து மதிப்போ 3 கோடியே 60 லட்சமாக உள்ளது. கிட்டத்தட்ட 5 மடங்கு முதல்வரை விட அவரது மகன் பணக்காரராக உள்ளார்.

    Also read: வேகமாக பரவும் ஒமைக்ரான்: தற்காலிக மருத்துவமனைகளை தயார்படுத்தவும்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

    முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு புது டெல்லியில் உள்ள துவாரகாவில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் ஒரு குடியிருப்பு உள்ளது, அதே நேரத்தில் அவரது மகனுக்கு கல்யாண் பிகா மற்றும் ஹக்கிகத்பூர் (இரண்டும் நாளந்தா மாவட்டத்தில்) மற்றும் பாட்னாவில் உள்ள கன்கர்பாக் ஆகிய இடங்களில் விவசாய நிலம் மற்றும் வீடுகள் உள்ளன.

    இதைத்தொடர்ந்து, நிஷாந்திற்கு அவர்களது பூர்வீக கிராமமான கல்யாண் பிகாவில் விவசாய நிலம் உள்ளது. அதே கிராமத்தில் விவசாயம் சாராத நிலமும் உள்ளது. 1.45 லட்சம் மதிப்புள்ள 13 பசுக்களும், 9 கன்றுகளும் தன்னிடம் இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

    நிதிஷ் குமார் அரசு முன்பு அனைத்து கேபினட் அமைச்சர்களும் ஒவ்வொரு காலண்டர் கடைசி நாளில் தங்கள் சொத்துக்கள் மற்றும் கடன்களை வெளியிடுவதை கட்டாயமாக்கியது.

    தொடர்ந்து, துணை முதல்வர்கள் தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி இருவரும் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை அறிவித்துள்ளனர்.

    இதில் கூடுதல் சுவாரஸ்யமாக, நிதிஷ் குமாரின் அமைச்சரவை சகாக்களும் முதலமைச்சரை விட பணக்காரர்கள் ஆக உள்ளனர்.

    Also read: Omicron | உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரான்... நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Bihar, Nithish kumar

    அடுத்த செய்தி