• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தென் இந்திய முதலமைச்சர்கள் மாநாடு: அமித் ஷா தலைமையில் திருப்பதியில் இன்று நடைபெறுகிறது!

தென் இந்திய முதலமைச்சர்கள் மாநாடு: அமித் ஷா தலைமையில் திருப்பதியில் இன்று நடைபெறுகிறது!

தென் இந்திய முதலமைச்சர்கள் மாநாடு

தென் இந்திய முதலமைச்சர்கள் மாநாடு

ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெறும் முதலமைச்சர்கள் மாநாட்டில் பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின், சந்திரசேகர ராவ் ஆகியோர் பங்கேற்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

  • Last Updated :
  • Share this:
    திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் இந்திய முதலமைச்சர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தென்னிந்திய முதலமைச்சர்களின் 29வது மாநாடு ஆந்திர மாநிலம் திருப்பதியில் இன்று நடைபெறுகிறது.  தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள், அந்தமான் நிக்கோபர், லச்சத்தீவுகளின் துணைநிலை ஆளுநர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துரையாடவுள்ளார். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமித் ஷா நேற்று ஆந்திர மாநலம் வந்தடைந்தார்.

    அமித் ஷா, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலைக்கு சென்ற இரண்டு பேரும் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். சாமி கும்பிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு கோவில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி ஆகியோர் தீர்த்த பிரசாதங்கள், நினைவு பரிசுகள் ஆகியவற்றை வழங்கினர்.

    இன்று நடைபெறும் மாநாட்டில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோர் பங்கேற்பது உறுதி செய்யப்படவில்லை. அவர்கள், காணொலி காட்சி வாயிலாக மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது திருமலை திருப்பதி தேவஸ்தானம்...


    முதலமைச்சர்கள் மாநாடு காரணமாக திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் தனியார் ஹோட்டலில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: