கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பட்டியல் இன இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆறுதல்..

யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆறுதல் கூறினார்.

 • Share this:
  உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சண்ட்பா பகுதியில் வயலில் தாயுடன் வேலை செய்து கொண்டிருந்த 19 வயது இளம்பெண்ணை 4 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். மருத்துவமனையில் 15 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு இளம்பெண் உயிரிழந்த நிலையில், இறுதி மரியாதைக்கு அவகாசம் அளிக்காமல், சடலத்தை போலீஸார் எடுத்துச் சென்று நள்ளிரவில் தகனம் செய்தனர். இந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இளம்பெண்ணின் குடும்பத்தினருடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

  அப்போது, நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்ததாக இளம்பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். தங்களது மகளைப் பார்க்க முடியவில்லை என்றாலும், நீதி கிடைக்கும் என்று நம்புவதாக அவர் கூறினார். இதனிடையே, பல்ராம்பூர் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், வழியிலேயே உயிரிழந்தார்.

  மேலும் படிக்க.. வேளாண் சட்டங்களுக்கு எதிராக, எம்.பி திருச்சி சிவா உச்சநீதிமன்றத்தில் மனு..  இதேபோல, ஜியான்பூர் பகுதியில் சிறுமியை உறவினர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
  Published by:Vaijayanthi S
  First published: