வங்கி மேலாளர் என்று கூறி முதலமைச்சர் மனைவியிடம் 23 லட்ச ரூபாய் மோசடி!

news18
Updated: August 8, 2019, 8:18 AM IST
வங்கி மேலாளர் என்று கூறி முதலமைச்சர் மனைவியிடம் 23 லட்ச ரூபாய் மோசடி!
ப்ரனீத் கவுர்
news18
Updated: August 8, 2019, 8:18 AM IST
பஞ்சாப் மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுரை ஏமாற்றி வங்கிக் கணக்கு விவரங்களை வாங்கி 23 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங். அவரது மனைவி பிரனீத் கவுர். பஞ்சாப் மாநிலத்திலுள்ள பட்டியாலா தொகுதியின் எம்.பியாக இருந்துவருகிறார். அவர் கடந்த சில தினங்களுக்கு காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதில், ‘வங்கி மேலாளர் என்று கூறி மொபைல் போன் மூலம் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டார். அவர், என்னுடைய சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக வங்கிக் கணக்கு மற்றும் ஏ.டி.எம் கார்டு விவரங்களை சொல்லச் சொன்னார். நான், அதனை நம்பி என்னுடைய வங்கி கணக்கு விவரத்தை அவரிடம் தெரிவித்தேன்.


சிறிது நேரத்தில் என்னுடைய மொபைல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், என்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து 23 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் மொபைல் போன் அழைப்பை வைத்து ஆய்வு செய்தனர். மோசடியில் ஈடுபட்ட நபர், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருப்பது தெரியவந்தது. பின்னர், மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

Also see:

Loading...

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...