247 தமிழ் எழுத்துக்களை பாடும் சிறுமி - புதுச்சேரி முதல்வர் பாராட்டு
247 தமிழ் எழுத்துக்களை பாடும் சிறுமி - புதுச்சேரி முதல்வர் பாராட்டு
புதுச்சேரி முதல்வர் பாராட்டு
Puducherry: புதுச்சேரி மூலக்குளம் அன்னை தெரேசா நகரை சேர்ந்த 12 வயது மாணவி ரித்திகா பாரதிதாசன். இவர் அமிர்த வித்யாலயா பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
புதுச்சேரியில் 247 தமிழ் உயிர் எழுத்துக்களையும் பாடும் சிறுமியை முதலமைச்சர் ரங்கசாமி வெகுவாக பாராட்டியுள்ளார்.
புதுச்சேரி மூலக்குளம் அன்னை தெரசா நகரை சேர்ந்த 12 வயது மாணவி ரித்திகா பாரதிதாசன். இவர் அமிர்த வித்யாலயா பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 247 தமிழ் எழுத்துக்களை பாடல் வடிவில் ஒரு நிமிடம் 40 நொடிகளில் வேகமாக பாடி சாதனை செய்தார். இந்த சாதனை கடந்த மார்ச் 30ந் தேதி ஆன்-லைன் மூலமாக இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஏசியா புக் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ்களுடன் மாணவி ரித்திகா புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாணவி ரித்திகா, ஒரு நிமிடம் 40 நொடிகளில் 247 தமிழ் எழுத்துக்களையும் பாடலாக விரைவாக பாடினார்.
முதலமைச்சர் இருக்கையில் இருந்து எழுந்து அவரின் உச்சரிப்பை கவனித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது அரியாங்குப்பம் தொகுதி எம்எல்ஏ பாஸ்கர் உடனிருந்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.