கேரள மாநில சட்டமன்ற தேர்தல், தமிழகத்தைப் போலவே கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. 14 மாவட்டங்களை கொண்ட, 140 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.
இதில், கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலை விட கூடுதலாக 6 தொகுதிகளை கைப்பற்றி இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வீழ்ச்சியடைந்தது.
பாஜக கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நெமம் தொகுதியைக் கூட இந்த தேர்தலில் இடதுசாரியிடம் விட்டு கொடுத்து விட்டது. தேதலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் பினராயி விஜயன் அளித்த பேட்டியில், “கேரளாவில் பாஜகவுக்கு இடமில்லை. வகுப்புவாதம் அல்லது மதவேற்றுமையை கேரளா ஏற்று கொள்ளாது” என்று கூறியுள்ளார்.
Must Read : வெற்றியை கொண்டாடுவதற்கான நேரமல்ல, கொரோனா வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது: பினராயி விஜயன்
முன்னதாக, பினராயின் விஜயன் கூறுகையில், “பாஜக தலைவர்கள் கேரளாவில் ஆட்சி அமைக்கப்போவதாக தெரிவித்தனர். அதே நேரத்தில், கேரள சட்டப்பேரவையில் அவர்களுக்கு இருக்கும் எண்ணிக்கையை முழுமையாக இந்த தேர்தலில் குறைப்போம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.