கேரளாவில் மழைக்கு 29 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அறிவிப்பு

கேரளாவில் மழைக்கு 29 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அறிவிப்பு
பினராயி விஜயன்
  • News18
  • Last Updated: August 13, 2018, 4:27 PM IST
  • Share this:
கேரளாவில் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்குப் பருவமழையால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர். பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் 4 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், அவர்களது குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அத்துடன் வீடுகளை இழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, முதலமைச்சர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, வருவாய் மற்றும் பேரிடர் அமைச்சர் சந்திரசேகரன், டிஜிபி லோக்நாத் பெஹ்ரா மற்றும் தலைமைச்செயலாளர் ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டனர். மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு புதுச்சேரி அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கேரள மக்களுக்காக பொதுமக்களிடம் நிதிதிரட்டி, அனுப்பிவைக்கப்படும் என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதற்காக நிதியுதவி அளிக்குமாறு பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
First published: August 11, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading