கேரளாவில் கனமழை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 167-ஆக உயர்வு

கேரளாவில் கனமழை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 167-ஆக உயர்வு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: August 18, 2018, 1:38 PM IST
  • Share this:
கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 167ஆக உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கடந்த 10-ம் தேதி முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, கடவுளின் தேசம் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் கேரளா, 94 ஆண்டுகளுக்குப் பிறகு மோசமான வெள்ளப் பாதிப்புகளை சந்தித்துள்ளது.  எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் 50,000 மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொச்சி அருகே உள்ள எடப்பள்ளி பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் 2,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால் பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

ஏற்கெனவே 18 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், கூடுதலாக 23 ஹெலிகாப்டர் மற்றும் 45 பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே காசர்கோடு தவிர்த்து மற்ற 13 மாவட்டங்களிலும் கடும் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை இன்று காலை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளப் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். இன்றிரவு 7 மணியளவில் திருவனந்தபுரம் வரும் மோடி, இரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் பிரதமர் மோடி நாளை பார்வையிட உள்ளார்.
First published: August 17, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading