நிவாரண முகாம்களில் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு

நிவாரண முகாம்களில் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு
முகாம்களை பார்வையிடும் முதல்வர் பினராயி விஜயன்
  • News18
  • Last Updated: August 23, 2018, 12:27 PM IST
  • Share this:
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண முகாம்களில் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு மேற்கொண்டார்.

கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 3 ஆயிரத்து 274 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். செங்கனூர் பகுதியில் நிவாரண முகாம்களை முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று காலை ஆய்வு செய்தார். அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு செய்துகொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

மழை குறைந்ததால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள், வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்.


பல இடங்களில் வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்துள்ளன. அதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். வீடுகளில் புகுந்த பாம்புகளை, பாம்புபிடி வீரர்கள் வரவழைக்கப்பட்டு, அகற்றப்படுகின்றன. இன்னும் சிலர் பாம்புபிடி வல்லுநர்களை தொடர்புகொண்டு ஆலோசனை கேட்டுவருகின்றனர். வீடுகளிலிருந்து பாம்புகளை அகற்றுவதில் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள்.
First published: August 23, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading