மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்ய பீகார் அமைச்சரவை ஒப்புதல்

news18
Updated: July 12, 2018, 4:55 PM IST
மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்ய பீகார் அமைச்சரவை ஒப்புதல்
பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார்
news18
Updated: July 12, 2018, 4:55 PM IST
பீகாரில் கடந்த 2016-ஆம் ஆண்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடுமையான விதிமுறைகளைக் கொண்ட மதுவிலக்கு சட்டத்தில் திருத்தங்களை செய்ய அந்த மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. 

பீகாரில் பூரண மதுவிலக்கு அமலிலுள்ளநிலையில் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளது. இதன்படி, மதுபானங்களை அருந்துவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் முதல்முறையாக குற்றம் செய்வோர் 50,000 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்தால் போதுமானது என சட்ட திருத்தம் செய்யப்பட உள்ளது.

மேலும் இந்த மதுவிலக்கு சட்ட திருத்ததில் மது அருந்துதல் என்பது ஜாமினில் வரமுடியாத குற்றம் இல்லை என்ற நிலையில் இருந்து ஜாமினில் வரக்கூடிய குற்றமாக மாற்றப்படுகிறது. மேலும் மதுபானம் வைக்கப்பட்டுள்ள வீடு அல்லது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தடை விதிமுறைகளை தவறாக பயன்படுத்துவோர் பற்றிய புகார்களை ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது என பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார். மேலும் இந்த சட்ட திருத்தம் சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தின்போது தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...