ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஜி-20 மாநாடு ஆலோசனைக்கூட்டம்.. டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஜி-20 மாநாடு ஆலோசனைக்கூட்டம்.. டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜி20 கூட்டத்தில் பங்கேற்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi | Tamil Nadu

ஜி- 20 கூட்டமைப்பு விளக்கக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.

உலக வல்லரசு நாடுகளை உள்ளடக்கியிருக்கும் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறவுள்ளது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜி20 கூட்டமைப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

இந்த நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும், ஜி-20 அமைப்பு குறித்து விளக்கி மாநாட்டை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.

இதையும் படிங்க | ஜி-20 மாநாடு ஆலோசனைக்கூட்டம் - எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப்தன்கர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளார். இன்று பிற்பகல் 1 மணிக்கு டெல்லி சென்றடையும் முதலமைச்சர், மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: CM delhi visit, CM MK Stalin, G20 Summit, MK Stalin