Home /News /national /

ஜார்கண்ட் அரசியல் ஆட்டம்.. நம்பிக்கை தீர்மானத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி..!

ஜார்கண்ட் அரசியல் ஆட்டம்.. நம்பிக்கை தீர்மானத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி..!

முதல்வர் ஹேமந்த் சோரன்

முதல்வர் ஹேமந்த் சோரன்

Jharkhand state politics : ஜார்கண்ட் மாநில அரசியலில் நிலவும் பரபரப்பான சூழ்நிலை மத்தியில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Jharkhand, India
    ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எதிராக பா.ஜ.க சுமத்திய ஊழல் புகாரில் இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் நடைபெற்றது. அதில் முதல்வர் ஹேமந்த் சோரன் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார்.

    ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரன் சுரங்க குத்தகை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்தாக பா.ஜ.க குற்றம் சாட்டியது. அதில் முதல்வர் ஹேமந்த் சோரனை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கத் தலைமைத் தேர்தல் ஆணையம் அம்மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோனால் முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டியது வரும்.

    இந்த நிலையில் ஜார்கண்ட் மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச்சூழ்நிலையைப் பயன்படுத்தி பா.ஜ.க குதிரை பேரத்தை நடத்துவதாக முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டினார். அவரது கட்சி உறுப்பினர்களை பா.ஜ.க வாங்க முயற்சித்ததாக கூறினார். பா.ஜ.க மற்ற மாநிலங்களில் செய்தது போல் இங்கும் சதித் திட்டத்தைத் தீட்டுவதாகக் கூறிய அவர் சட்டமன்றத்தில் இதுதொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடந்தது.  அதில் 48 ஓட்டுகள் அவருக்கு ஆதரவாகப் போடப்பட்டது. ஓட்டெடுப்பிற்கு முன் எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது. முடிவாக பெரும்பான்மையாக வாக்குகளைப் பெற்று தற்போது அவரது முதல்வர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார்.



    இந்த ஓட்டெடுப்பிற்காக அவரது கட்சி உறுப்பினர்களை பா.ஜ.க.வின் பிடியில் மாட்டாமல் தப்பிக்க சண்டிகரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைத்து காலையில் விமானம் மூலம் சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தார் .

    Also Read : மின் கட்டண பில் மோசடி.. செல்போனுக்கு வந்த லிங்கை கிளிக் செய்ததால் பறிபோன ரூ.1.68 லட்சம்

    ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்தில் மொத்தம் 81 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 உறுப்பினர்களை வைத்துள்ளனர் மற்றும் காங்கிரஸ் கட்சி 18 உறுப்பினர்கள் வைத்துள்ளனர். மேலும் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிக்கு ஒரு உறுப்பினர் உள்ளது. மொத்தம் ஜேஎம்எம் கூட்டணி 49 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளனர். பா.ஜ.க 26 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: BJP, Hemant Soren, Jharkhand

    அடுத்த செய்தி