அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு... விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு...!

நீதிபதி ரஞ்சன் கோகாய்

நவம்பர் 17-ம் தேதியன்று தலைமை நீதிபதி ஓய்வுபெறுவதால், அதற்கு முன்பு தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  உச்சநீதிமன்றத்தில் அயோத்தி பாபர் மசூதி நில விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றுடன் நிறைவடையும் என தலைமைநீதிபதி ரஞ்சன் கோகய் தெரிவித்துள்ளார்.

  அயோத்தியில் சர்ச்சைக்குரிய இரண்டு புள்ளி ஏழு ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

  இந்த வழக்கின் விசாரணை, 39வது நாளாக நேற்று நடைபெற்றது. இந்நிலையில் 40-வது நாளான இன்றுடன் வழக்கு விசாரணை நிறைவடையும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கூறியுள்ளார்.

  நவம்பர் 17-ம் தேதியன்று தலைமை நீதிபதி ஓய்வுபெறுவதால், அதற்கு முன்பு தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அயோத்தி மாவட்டத்தில் ஏற்கனவே டிசம்பர் 10-ம் தேதி வரை 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  தீர்ப்பை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்துமாறு தமிழகம், கேரளா, தெலங்கானா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: