உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் எஸ்.ஏ பாப்டே!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் எஸ்.ஏ பாப்டே!
எஸ். ஏ பாப்டே
  • News18
  • Last Updated: October 18, 2019, 11:50 AM IST
  • Share this:
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தனக்குப் பின்னர் மூத்த நீதிபதி எஸ்.ஏ பாப்டேவை நியமிக்க, தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடிதம் எழுதியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோயாய், வரும் நவம்பர் 17-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். மரப்புப்படி ஓய்வு பெறப்போகும் தலைமை நீதிபதி, அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்க வேண்டும் என்பதால், ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதி எஸ்.ஏ பாப்டேவை பரிந்துரை செய்துள்ளார்.

இந்நிலையில், தலைமை நீதிபதியாக எஸ். ஏ.பாப்டே என்பவரை நியமிப்பதாக ரஞ்சன் கோகாய் சட்ட அமைச்சகத்திற்கு எழுதியுள்ள பரிந்துரை கடிதத்தில் கூறியுள்ளார். பாப்டே சுப்ரீம் கோர்ட்டின் 47 வது நீதிபதியாவார்.


வரும் நவம்பர் 18 ம் தேதி பாப்டே பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஒரு வருடம் 5 மாத காலம் பொறுப்பில் இருப்பார். அதாவது வரும் 2021 ஏப்ரல் மாதம் 23 ம் தேதி வரை பதவி வகிப்பார்.

Also See...

First published: October 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்