ஆர்.டி.ஐ சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு கூறுவது என்ன?

யாரையும் இருளில் வைக்க வேண்டும் என்றும் யாரும் விரும்பவில்லை. இங்கு எழும் கேள்வி, நாம் எங்கே கோடு வரையவேண்டும் என்பதுதான் - உச்ச நீதிமன்றம்

ஆர்.டி.ஐ சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு கூறுவது என்ன?
உச்ச நீதிமன்றம்
  • News18
  • Last Updated: November 13, 2019, 5:10 PM IST
  • Share this:
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றமும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்தான் வரும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் செயலாளர், உச்ச நீதிமன்றத்தின் மத்திய பொதுத் தகவல் அதிகாரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

அந்த உத்தரவில், ‘வெளிப்படைத் தன்மை நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்பதில்லை. அதற்காக, ஆர்.டி.ஐயை உளவு பார்க்கும் கருவியாக பயன்படுத்தக் கூடாது. வெளிப்படைத்தன்மையைப் கையாளும்போது நீதித்துறையின் சுதந்திரத்தை மனதில் கொள்ளவேண்டும். இன்னமும் இருளில் இருக்கவேண்டும் என்று யாரும் விரும்பவில்லை. யாரையும் இருளில் வைக்க வேண்டும் என்றும் யாரும் விரும்பவில்லை. இங்கு எழும் கேள்வி, நாம் எங்கே கோடு வரையவேண்டும் என்பதுதான்.


எங்கேயோ கோடு வரையப்பட்டுள்ளளது. வெளிப்படைத்தன்மையின் பெயரில் நீதித்துறையை நீங்கள் அழிக்க முடியாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரவில், ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பில் வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also see:
First published: November 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்