NV RAMANA | உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பெயர் பரிந்துரை

NV RAMANA | உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பெயர் பரிந்துரை

நீதிபதி என்.வி.ரமணா

ஆந்திராவை சேர்ந்த என்.வி.ரமணா 2014-ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

  • Share this:
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பரிந்துரை செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ.போப்டே 2019-ம் ஆண்டு இந்த பொறுப்புக்கு வந்தார். அவருடைய பதவி காலம் வரும் ஏப்ரல் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யாரை நியமிப்பது என்பது குறித்து பரிந்துரை செய்யும்படி தற்போதைய தலைமை நீதிபதி போப்டேவிடம் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் மூலம் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள போப்டே தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். போப்டேவின் பரிந்துரை ஏற்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமிக்கப்படுவார். ஆந்திராவை சேர்ந்த என்.வி.ரமணா 2014-ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published: