உன்னாவ் பெண் விவகாரம்! பதிவாளருக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கேள்வி

பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினர் எழுதிய கடிதத்தை தாமதமாக வழங்கியது ஏன்? என்பது குறித்து விளக்கமளிக்குமாறு உச்சநீதிமன்ற பதிவாளருக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.

news18
Updated: July 31, 2019, 1:02 PM IST
உன்னாவ் பெண் விவகாரம்! பதிவாளருக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கேள்வி
உச்ச நீதிமன்றம்
news18
Updated: July 31, 2019, 1:02 PM IST
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கடிதத்தை தாமதமாக வழங்கிய உச்ச நீதிமன்ற பதிவாளரை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கண்டித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் மீது லாரி மோதிய விபத்துக்கும் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் தான் காரணம் என புகார் எழுந்தது.


இதுதொடர்பான 35 புகார்களுக்கு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து உத்தரபிரதேச அரசின் பரிந்துரையின் அடிப்படையில் உன்னாவ் வழக்கு நேற்று சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரிக்க தொடங்கியுள்ள சிபிஐ, பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினர் எழுதிய கடிதத்தை தாமதமாக வழங்கியது ஏன்? என்பது குறித்து விளக்கமளிக்குமாறு உச்சநீதிமன்ற பதிவாளருக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.

Also see...

Loading...

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...