டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்த ப.சிதம்பரம்: காங்கிரஸைத் தோற்கடித்தற்காக நன்றி? நெட்டிசன்கள் கேள்வி

டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்த ப.சிதம்பரம்: காங்கிரஸைத் தோற்கடித்தற்காக நன்றி? நெட்டிசன்கள் கேள்வி
ப.சிதம்பரம் (கோப்பு படம்)
  • Share this:
மற்ற மாநில மக்களுக்கு உதாரணமாக இருந்த டெல்லி மக்களுக்கு நான் மரியாதை செலுத்திக் கொள்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி 59 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதன்மூலம், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியாகியுள்ளது. டெல்லி முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் மிகப்பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆம் ஆத்மியை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க 11 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸால் ஒரு தொகுதியில் கூட முன்னிலையைக் கூட பெற முடியவில்லை.

இந்தநிலையில், டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், ‘ஆம் ஆத்மி வெற்றியடைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த டெல்லி மக்கள் பிரித்தாளும் மோசமான சித்தாந்தத்தைக் கொண்ட பா.ஜ.கவைத் தோற்கடித்துள்ளனர்.
2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதைக் காட்டியதற்காக டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் ஒரு தொகுதியைக் கூட வெற்றி பெறாத நிலையில் ப.சிதம்பரத்தின் ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see:


 
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்