• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தீபாவளியை சிறையில் கழிக்கும் ப.சிதம்பரம்... ஜாமின் மனு விசாரணை ஒத்திவைப்பு...!

தீபாவளியை சிறையில் கழிக்கும் ப.சிதம்பரம்... ஜாமின் மனு விசாரணை ஒத்திவைப்பு...!

  • Share this:
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணையை, டெல்லி உயர்நீதிமன்றம் நவம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இதன்மூலம் தீபாவளி பண்டிகையை சிதம்பரம் திகார் சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கில், ப.,சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. எனினும் இதேவிவகாரத்தில் அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளதால், விடுதலை ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். ஜாமின் மனுவை விசாரித்த நீதிமன்றம், 7 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 4-ம் தேதிககு ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிதம்பரத்தின் அமலாக்கத்துறை காவலை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Also Watch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: