• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தமிழில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய மோடிக்கு சிறையிலிருந்து ப.சிதம்பரம் பதில்!

தமிழில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய மோடிக்கு சிறையிலிருந்து ப.சிதம்பரம் பதில்!

"எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்யம் மற்றும் மகிழ்ச்சி தந்து இன்றுபோல் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய உங்களை ஆசிர்வதிக்கட்டும்"

  • News18
  • Last Updated :
  • Share this:
    உங்கள்(மோடி) விருப்பப்படி, மக்களுக்குச் சேவை செய்வதைத் தொடரவே விரும்புகிறேன். ஆனால், துரதிருஷ்டவசமாக உங்கள் புலனாய்வு அமைப்புகள், நான் சேவை செய்வதைத் தடுத்துள்ளனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரம் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு கடந்த செப்டம்பர் 16-ம் தேதி பிறந்தநாள் வந்தது.

    அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, காரைக்குடியில் உள்ள சிதம்பரத்தின் இல்லத்துக்கு தமிழில் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், ‘உங்கள் பிறந்தநாள் அன்று என் இதயம்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்யம் மற்றும் மகிழ்ச்சி தந்து இன்றுபோல் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய உங்களை ஆசிர்வதிக்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    செப்டம்பர் 16-ம் தேதி குறிப்பிடப்பட்டுள்ள அந்த வாழ்த்துச் செய்தியை இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிதம்பரம் அதற்கு பதிலும் அளித்துள்ளார். அந்த பதிலில், ‘என்னுடைய பிறந்தநாளுக்கு நீங்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியைப் பெற்றதில் ஆச்சர்யத்துடன் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுடைய விருப்பப்படி மக்களுக்கு சேவை செய்வதைத் தொடர விரும்புகிறேன். துரதிருஷ்டவசமாக உங்களுடைய புலனாய்வு அமைப்புகள் நான் சேவை செய்வதிலிருந்து என்னைத் தடுத்துள்ளனர்.

    இந்தச் சங்கடங்கள் ஓய்ந்தப் பிறகு, நீங்களும் நானும் சேவை செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளபடி, மக்களுக்கு மத்தியில் மீண்டும் வருவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: