குடியரசுத் தலைவரும் ஈடுபட்டது வருத்தமளிக்கிறது! மகாராஷ்டிரா விவகாரத்தில் சிதம்பரம் ஆதங்கம்

குடியரசுத் தலைவரும் ஈடுபட்டது வருத்தமளிக்கிறது! மகாராஷ்டிரா விவகாரத்தில் சிதம்பரம் ஆதங்கம்
சிதம்பரம்
  • News18
  • Last Updated: November 27, 2019, 5:08 PM IST
  • Share this:
தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்ற விவகாரத்தில் குடியரசுத் தலைவரும் ஈடுபட்டிருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தார். அதனடிப்படையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது.

ஆனால், மறுநாள் சனிக்கிழமை காலை 8 மணி அளவில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவாரின் ஆதரவுடன் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்றார். அதிகாலை 5.50 மணிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுமிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஆஜர்படுத்தப்படுவதற்காக ப.சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார்.அப்போது செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய அவர், ‘தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார் இரவுவோடு இரவாக பதவியேற்றதாக ஆளுநர், பிரதமர், குடியரசுத் தலைவர் அனைவரும் பொறுப்பு. அதிகாலை 4 மணிக்கே எழுந்து குடியரசுத் தலைவரும் இந்த விவகாரத்தில் ஈடுபட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு கார்த்தி சிதம்பரம், எப்போதும் அமைதிப்படுத்த முடியாது’ என்று பதிவிட்டுள்ளார்.

Also see:

First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்