Home /News /national /

அறைக்குச் சென்ற தலைமை நீதிபதி; முன்ஜாமினுக்காக தவிக்கும் சிதம்பரம்! அடுத்தது என்ன?

அறைக்குச் சென்ற தலைமை நீதிபதி; முன்ஜாமினுக்காக தவிக்கும் சிதம்பரம்! அடுத்தது என்ன?

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அயோத்தி வழக்கு குறித்த விசாரணையில் ஈடுபட்டிருந்ததால், பிற்பகலில் சிதம்பரம் மனு மீது விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  • News18
  • Last Updated :
    ஐ.என்.எக்ஸ் வழக்கில் முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடவில்லை என்று தெரியவந்துள்ளது.

    முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. அதனையடுத்து, முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.

    அந்த மனு, இன்று காலையில் நீதிபதி ரமணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ரமணா, ‘இந்த மனுவை தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்கிறேன்’என்று உத்தரவிட்டார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அயோத்தி வழக்கு குறித்த விசாரணையில் ஈடுபட்டிருந்ததால், பிற்பகலில் சிதம்பரம் மனு மீது விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், அயோத்தி வழக்கு தொடர்பான விசாரணை முடிந்த பிறகு, ரஞ்சன் கோகாய் அவருடைய அறைக்கு சென்றுவிட்டார். சிதம்பரத்தின் தரப்பிலும், முன்ஜாமின் மனுவை விசாரிப்பதற்கு ரஞ்சன் கோகாயிடம் கோரிக்கைவைக்கப்படவில்லை. அதனால், சிதம்பரத்துக்கு இன்று முன்ஜாமின் கிடைக்காது என்று தெரிகிறது. சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு, இதுவரையில் பட்டியலிடப்படவில்லை. மனுவை பட்டியலிடும் முயற்சி வழக்கறிஞர் கபில்சிபல் ஈடுபட்டுள்ளார்.

    முன்ஜாமின் மனுவை அத்தனை முக்கியத்துவம் கொண்ட வழக்காக கருதி நீதிபதிகள் விசாரணைக்கு எடுப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்றே கருதப்படுகிறது. மற்ற வழக்குகள் எப்போது விசாரிக்கப்படுமோ அதன் அடிப்படையிலேயே சிதம்பரத்தின் அவசர வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: P.chidambaram

    அடுத்த செய்தி