ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஓசி ஏர்கூலரில் ஒய்யார தூக்கம்.. அடம்பிடித்த நபருக்கு அடி உதை கொடுத்த பெண் - வைரல் வீடியோ

ஓசி ஏர்கூலரில் ஒய்யார தூக்கம்.. அடம்பிடித்த நபருக்கு அடி உதை கொடுத்த பெண் - வைரல் வீடியோ

நபரை செருப்பால் அடித்து தாக்கிய பெண்

நபரை செருப்பால் அடித்து தாக்கிய பெண்

தாக்குதலுக்குள்ளான நபரோ குத்துக்கல் போல அதற்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் அசால்டாக தரையில் அமர்ந்து அடிகளை வாங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ambikapur, India

மருத்துவமனையில் ஏர்கூலர் போட்டுக்கொண்டு கூலாக தூங்க நினைத்த நபர், ஒருவர் பெண்ணிடம் சிக்கி சரமாரியான அடி, உதையை வாங்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் அரசு மருத்துவமனையில் ஒரு மத்திய வயது மதிக்கத்தக்க நபர் திடீரென உள்ள நுழைந்து நோயாளிகள் இருக்கும் வார்டின் தரையில் படுக்கை விரித்து போட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்த ஏர்கூலரை ஆன் செய்து விட்டு படுத்து தூங்கத் தொடங்கியுள்ளார். மருத்துவமனையில் நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கூலரின் குளிர் தாங்க முடியாமல் தவித்துள்ளனர். அங்கிருந்த பெண் ஒருவர் பொறுக்க முடியாமல் அந்த நபரிடம் சென்று மற்றவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு கூலரை நிறுத்த வேண்டும் என்ற கேட்டுள்ளார். ஆனால், அந்த நபர் பெண்ணின் பேச்சை காது கொடுத்து கேட்பதாக இல்லை. அவர் பாட்டுக்கு கவலைப்படாமல் தூக்கத்தை தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் தானாகவே சென்று கூலரை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தனது சொகுசான தூக்கம் கெடுகிறதே என்ற கவலையில் அந்த நபர் மீண்டும் கூலரை ஆன் செய்துவிட்டு வந்து தரையில் படுத்து தூங்கியுள்ளார்.

இதையும் படிங்க: சகோதரருக்கு வெளிநாட்டு வேலை வாங்கித்தரும் ஆசையில் 8.20 லட்சம் ரூபாய் இழந்த பெண்!

இதற்கு மேல் பொறுக்க முடியாது என ஆத்திரமடைந்த பெண், அந்த நபர் அருகே வந்து எழுப்பி திட்ட தொடங்கியுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்த நிலையில் அந்த நபர் அங்கிருந்து கூலரை ஆஃப் செய்து நகர்வதாக இல்லை என விடாப்பிடியாக இருந்துள்ளார். கடுப்பில் தனது செருப்பை எடுத்து அந்த நபரின் முகத்திலும் உடலிலும் சரமாரியாக தாக்கத்தொடங்கிய பெண், காலால் எட்டி உதைத்தும் தாக்குதல் நடத்தினார். ஆனால், அந்த நபரோ குத்துக்கல் போல அதற்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் அசால்டாக தரையில் அமர்ந்து அடிகளை வாங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வேகமாக வைரலாகிவருகிறது. பின்னர் பாதுகாவலர்களிடம் பெண் புகார் அளித்துள்ளார். அவர்கள் வந்து விசாரித்த போது தான் அந்த நபர் மருத்துவ காரணங்களுக்காக மருத்துவமனைக்கு வரவில்லை என்பதும், மருத்துவமனை கூலர் காற்றில் நல்ல தூக்கம் போடத்தான் வந்துள்ளார் என்ற உண்மை தெரிந்துள்ளது. உடனடியாக அந்த நபரை அப்புறப்படுத்திய காவலர்கள், மருத்துவமனையில் தேவையற்ற நபர்கள் நுழைவதை கண்காணிப்பதாக உறுதியள்ளத்துள்ளனர்.

First published:

Tags: Air Cooler, Chattisgarh, Fight, Viral Video