Home /News /national /

7 மணி நேரத்தில் 101 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்த அரசு மருத்துவருக்கு சிக்கல்!

7 மணி நேரத்தில் 101 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்த அரசு மருத்துவருக்கு சிக்கல்!

sterilisation

sterilisation

மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஒரு மருத்துவர் ஒரு நாளில் அதிகபட்சமாக 30 கருத்தடை ஆபரேஷன்கள் மட்டுமே செய்ய வேண்டும்

  • News18 India
  • 2 minute read
  • Last Updated :
அரசு இலவச மருத்துவ முகாமில் 7 மணி நேரத்தில் 101 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையை ஒரே மருத்துவர் மேற்கொண்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது..

சட்டீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள நர்மதாபூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதியன்று இலவச கருத்தடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கருத்தடை செய்துகொள்வதற்காக ஏராளமான மலைவாழ் பெண்கள் வந்திருந்தனர். அப்பெண்களுக்கு மருத்துவர் ஜிப்னஸ் ஏக்கா என்பவர் மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை கருத்தடை ஆபரேஷன்கள் செய்துள்ளார்.

8 மணி நேரம் நடந்த இந்த முகாமில் 7 மணி நேரத்தில் 101 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷனை மருத்துவர் ஜிப்னஸ் ஏக்கா மட்டும் செய்திருப்பதாக தெரியவந்தது.

ஒரே மருத்துவரே இத்தனை பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வது விதிமீறல் என்பதால் இது தொடர்பாக சுகாதாரத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Also Read:  காவல்நிலையத்திலிருந்து பொருட்கள் திருடி ₹ 26 லட்சம் சம்பாதித்த பெண் போலீஸ்!

இந்நிலையில் கருத்தடை ஆபரேஷன்கள் செய்த மருத்துவர் சுகாதாரத்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இலவச முகாமில் ஏராளமான மலைவாழ் பெண்கள் குவிந்தனர், அவர்கள் தொலைதூர பகுதிகளில் இருந்து வருவதாகவும் தங்களால் மீண்டும் ஒரு முறை சிரமத்துடன் பயணம் செய்து வரமுடியாது என கூறியதால் அனைவருக்கும் ஆபரேஷன்களை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் அவரிடம் கருத்தடை ஆபரேஷன் செய்து கொண்ட யாருக்கும் எந்தவித மருத்துவ ரீதியான சிக்கலும் ஏற்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பாக சுர்குஜா தலைமை சுகாதார அலுவலர் பி.எஸ்.சிசோடியா, சம்பந்தப்பட்ட மருத்துவர் ஜிப்னஸ் ஏக்கா மற்றும் அம்முகாமை நடத்திய மருத்துவ அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். மேலும் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Also Read:   தாலிபான்களுக்கு பாகிஸ்தான் தூதரகம் கட்டளையிட்டது – அம்பலப்படுத்திய ஆப்கன் துணை அதிபர்!

மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஒரு மருத்துவர் ஒரு நாளில் அதிகபட்சமாக 30 கருத்தடை ஆபரேஷன்கள் மட்டுமே செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய குடும்ப நல திட்டத்தின்படி கருத்தடை செய்து கொள்ளும் பெண்களுக்கு ஊக்கத்தொகையாக 1800 ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக இத்திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

Also Read:   600 தாலிபான்களை ஒரே நாளில் போட்டுத்தள்ளிய பஞ்ஷிர் போராளிகள்; 1000 பேர் சிறைபிடிப்பு!+

இது ஒருபுறமிருக்க முன்னதாக 2014ல் சட்டீஸ்கரின் பிலாஸ்பூரில் நடைபெற்ற அரசு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு கருத்தடை செய்த பெண்கள் 13 பேர் உயிரிழந்தனர், 80 பேருக்கு கடுமையான உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இது அந்த காலகட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

கொரோனா பரவலுக்கு பிறகு கருத்தடை முகாம்கள் நடைபெறாமல் இருந்து வருவதாகவும் தற்போது அரசின் இந்த முகாமை பயன்பத்தி பல்வேறு காரணங்களுக்காக அதிக அளவில் பெண்கள் குவிந்ததாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published:

Tags: Chattisgarh

அடுத்த செய்தி