முகப்பு /செய்தி /இந்தியா / Chhattisgarh | சத்தீஸ்கரில் சிஆர்பிஎப் வீரரை பிடித்து வைத்திருப்பதாக நக்சலைட்டுகள் அறிவிப்பு...

Chhattisgarh | சத்தீஸ்கரில் சிஆர்பிஎப் வீரரை பிடித்து வைத்திருப்பதாக நக்சலைட்டுகள் அறிவிப்பு...

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் தங்கள் வசமுள்ள ஒரு சி.ஆர்.பி.எப் படை வீரரை விடுவிப்பது தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்த அரசு தரப்பில் மத்தியஸ்தரை நியமிக்குமாறு நக்சலைட்டுகள் அறிவித்துள்ளனர்.

  • Last Updated :

சத்தீஸ்கரில் சுக்மா-பிஜாபூர் எல்லையில் கடந்த சனிக்கிழமை நக்சல்களை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த பாதுகாப்புப்படை வீரர்களை வனப்பகுதிக்குள் இழுந்துச் சென்ற நக்சலைட்டுகள், குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் சித்ரவதை செய்து கொலை செய்தனர். 24 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த 24 சி.ஆர்.பி.எப் வீரர்களுடன் தங்களது தரப்பில் 4 பேர் உயிரிழந்ததாக நக்சலைட்டுகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு சி.ஆர்.பி.எப் படை வீரர் தங்கள் வசம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் எதிரிகள் இல்லை எனவும், தங்கள் வசம் உள்ளவரை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும், நக்சலைட்டுகள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, தாக்குதல் காரணமாக பிஜாப்பூர் எல்லை கிராமங்களில் இருந்து வெளியேறிய கிராம மக்கள், மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.

மேலும் படிக்க... அமெரிக்காவில் ஏப்ரல் 19 முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Chhattisgarh, Naxal