சத்தீஸ்கரின் மனைவியை துண்டு துண்டுகளாக வெட்டிப்படுகொலை செய்து உடலை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருந்த கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் கள்ளநோட்டு தொடர்பாக ரெய்டில் இறங்கிய காவல்துறையினர் இளம்பெண் கொலை செய்யப்பட்ட செய்தியை மோப்பம் பிடித்தனர். அங்குள்ள வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடலை 5 துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் மறைத்ததை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் காவல்துறையினருக்கே கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்தது.
பிலாஸ்பூர் மாவட்டம் உஸ்லாபூரை சேர்ந்தவர் பவன் சிங் தாக்கூர். இவர் வீட்டிலே வைத்து ரூ.500, 2000 கள்ளநோட்டுகளை அடிப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. அவரது வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில் பணம் அச்சடிக்க பயன்பட்ட பிரிண்டர் போன்ற கருவிகள் சிக்கியது. சோதனையின் போது அந்த வீட்டின் அறைக்கு அருகில் இருந்த பாத்ரூமில் இருந்து துர்நாற்றம் வீசியது.
அதனையடுத்து சோதனை மேற்கொண்ட போது வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து பெண்ணின் உடல்கள் பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீசப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரித்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது தன்னுடைய மனைவியின் உடல்பாகங்கள் எனக் கூறி திகிலூட்டியுள்ளார். இதனையடுத்து அந்த நபரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Also Read: கோவையில் போலீசாரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி.. நூலிழையில் தப்பிய காவலர்கள்.. நடந்தது என்ன?
விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்:
பவன் சிங் தாக்கூர் காதலித்து சதி சாகூ என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். சதியின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக அவர்கள் பேசுவதில்லை. பவன் சிங் - சதி சாகூ இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். பவனுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பவன் சிங் கள்ள நோட்டு அச்சிடுவது குறித்து மனைவி சதி சாகூ அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
இதன்காரணமாக ஆத்திரத்தில் இருந்த பவன் தன் குழந்தைகள் இருவரையும் அம்மா வீட்டில் விட்டு வந்துள்ளார். அதன்பின்னர் மனைவியை கழுத்துநெறித்து கொலை செய்துள்ளார். இதன்பின்னர் உடலை எரித்துவிடலாம் என முடிவு செய்துள்ளார். மனைவியின் உடலை வெளியே கொண்டு போய் எரித்தால் மாட்டிக்கொள்வோம் என முடிவு செய்தவர் உடலை பல துண்டுகளாக வெட்டி மறைத்து வைக்க முடிவு செய்துள்ளார்.
இதனையடித்து கட்டிங் மெஷினை வாங்கி வந்து மனைவியின் உடலை 5 துண்டுகளாக வெட்டியுள்ளார். புதிதாக ஒரு தண்ணீர் தொட்டியை வாங்கிவந்து அதில் உடலை மறைத்து வைத்துள்ளார். குடும்பத்தினர் பேசுவதில்லை என்பதால் சதியின் நிலை குறித்து யாருக்கும் தெரியவில்லை. குழந்தைகளும் இல்லை என்பதால் பக்கத்து வீட்டினருக்கு சந்தேகம் வரவில்லை. இதில் இன்னும் கொடுமையான விஷயம் என்னவென்றால் சதியை கொலை செய்து 2 மாதங்கள் ஆகிவிட்டது இப்போது தான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chhattisgarh, Crime News, Husband Wife, Murder, Tamil News