சத்தீஸ்கர் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேஷ் பகேல் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் கிராமப்புற பொருளாதார மேம்பாடு, விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பு போன்றவற்றில் அரசு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்கள் அமல்படுத்திவருகிறது.
அதன் முக்கிய அம்சமாக கால்நடை வளர்ப்புக்கு மாநில அரசு கவனம் தந்து வரும் நிலையில், கோதான் நியாய் யோஜ்னா என்ற திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பசு மாடுகளின் சாணத்தை அரசு கொள்முதல் செய்து கால்நடை விவசாயிகளின் வருமானத்திற்கு வழி வகுத்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ மாட்டுச் சாணம் ரூ.2க்கு அரசு கொள்முதல் செய்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அரசு ரூ.150 கோடி மதிப்பிற்கு மாட்டுச் சாணத்தை கொள்முதல் செய்துள்ளது. இந்த திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக பசு மாட்டு கோமியத்தை கொள்முதல் செய்யம் திட்டத்தை அரசு இன்று தொடங்கியது.
அம்மாநிலத்தில் ஹரேலி என்ற பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்த திட்டமானது விவசாயிகள் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பூபேஷ் பகேல் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள முதலமைச்சர் வீட்டில் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளுடன் இணைந்து விழாவை கொண்டாடும் முதலமைச்சர் உழவு சார்ந்து பொருள்களை வைத்து பூஜை மற்றும் சடங்குகளை செய்து வழிபாடுகிறார்.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் ஆசிரியர் நியமன ஊழல்..அமலாக்கத்துறை சோதனையில் ரூ. 50 கோடி பணம், 5 கிலோ தங்கம் பறிமுதல்
இன்று தொடங்கும் இந்த புதிய திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் கோமியத்தை ரூ.4 கொள்முதல் செய்வதாக மாநில அரசு அறிவித்துள்ளது. கால்நடைகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் சாணம், கோமியம் ஆகியவற்றை வைத்து இயற்கை உரம் தயாரிக்கப்படும் என அரசு கூறியுள்ளது.கோமியம் கொள்முதல் செய்யும் திட்டத்தை காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் அறிவித்ததை தொடர்ந்து பாஜக ஆளும் கர்நாடகா மாநிலமும் இதை செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. முதல் கட்டமாக 100 கோசாலைகள் அமைக்கபோவதாக அம்மாநில கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவுகான் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bhupesh baghel, Chattisgarh, Chhattisgarh, Cow