முகப்பு /செய்தி /இந்தியா / பழங்குடியினரை மதமாற்ற முயற்சி செய்ததாக 4 மதபோதகர்கள் கைது

பழங்குடியினரை மதமாற்ற முயற்சி செய்ததாக 4 மதபோதகர்கள் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதமாற்ற தடை சட்டத்தின் கீழும், ஐபிசி பிரிவுகளின் கீழும் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பழங்குடியின மக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்ற முயற்சி செய்ததாக பங்குத்தந்தை மற்றும் 3 மதபோதகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டீஸ்கரில் பழங்குடியினர்கள் அதிக அளவில் வசித்து வரும் ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மதமாற்றம் செய்ய முயற்சி செய்த புகாரின் பேரில் மதபோதகர்கள் உள்ளிட்ட 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜாஷ்பூர் மாவட்டத்தின் பகிசா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பசியா எனும் கிராமத்தில், திலீப் நாகவன்ஷி என்பவரின் வீட்டில் வைத்து கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்களில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:  Gold Loan Waiver: நகைக் கடன் தள்ளுபடி.. பொங்கலுக்கு தமிழக அரசின் குட் நியூஸ்..

உள்ளூர் மொழியில் 'changai sabha' என அழைக்கப்படும் அந்த ஜெபக் கூட்டத்தில், பங்குத்தந்தை அருன் குஜூர், பசந்த் லக்ரா, சால்மன் டிகா மற்றும் டினோ குஜூர் ஆகிய மூன்று மதபோதகர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த கூட்டத்தில் உள்ளூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சிலரை கிறிஸ்துவ மதத்துக்கு மதமாற்ற நடவடிக்கைகளை அவர்கள் எடுத்துவந்ததாக கிராமத்தினருக்கு தகவல் சென்றது.

இதையும் படிங்க:   12 குடும்ப ஓட்டுகள் இருந்தும் ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற வேட்பாளர் - வாக்கு எண்ணும் மையத்தில் கதறி அழுதார்...

இதனையடுத்து ‘நாக்வன்ஷி சமாஜ்’ என்ற பழங்குடியின பிரிவின் தலைவர் லக்கு ராம், மற்றும் கிராம மக்கள் திலீப் நாகவன்ஷியின் வீட்டுக்கு சென்று, அந்த கூட்டத்தை நிறுத்துமாறு அங்கிருந்தவர்களிடம் கூறியிருக்கின்றனர். இருப்பினும், அவர்கள் சாக்குபோக்கு சொல்லியதால், இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக வருவாய்த்துறையினரும், போலீசாரும் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்திய நிலையில் மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாக மதபோதகர்கள் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இதையும் படிங்க:     காதலனுடன் மொபைலில் பேசி பெற்றோரிடம் சிக்கிய சிறுமி வீட்டில் இருந்து தப்பிக்க திரைப்பட பாணியில் செய்த சாகசம்!

சட்டீஸ்கரில் அமலில் இருந்து வரும் மதமாற்ற தடை சட்டத்தின் கீழும், ஐபிசி பிரிவுகளின் கீழும் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

First published:

Tags: Christian conversion, Religious conversion