முகப்பு /செய்தி /இந்தியா / ஊரடங்கில் மருந்து வாங்க சென்ற இளைஞர்.. போனை பிடுங்கி கன்னத்தில் பளார் விட்ட கலெக்டர் - வைரலாகும் வீடியோ

ஊரடங்கில் மருந்து வாங்க சென்ற இளைஞர்.. போனை பிடுங்கி கன்னத்தில் பளார் விட்ட கலெக்டர் - வைரலாகும் வீடியோ

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர்

வீடியோ வைத்து வைரலானதையடுத்து ரன்பீர் சர்மாவை மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார்.

  • Last Updated :

சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மருந்து வாங்க சென்ற இளைஞரை மாவட்ட ஆட்சியர் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூரஜ்பூர் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா போலீஸாருடன் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த சாஹில் குப்தாவை தடுத்து நிறுத்தி போலீஸார் விசாரனை மேற்கொண்டனர். இதனையடுத்து அவர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து செல்ல சென்றார். அப்போது காரில் ஏறச்சென்ற ஆட்சியர் ரன்பீர் சர்மா திடீரென அந்த நபரை அழைத்தார். சாஹில் கையில் வைத்திருந்த செல்போனை வாங்கி கீழே போட்டு உடைத்தார். அதிர்ச்சியுடன் அந்த நபர் பார்க்க அவரது கன்னத்தில் பளார் என ஆட்சியரை அறைந்தார்.

அந்த நபரோ கையில் பேப்பரை வைத்துக்கொண்டு மருந்து வாங்க செல்கிறேன் எனக் கூறியுள்ளார். அவரது பதிலை காதில் வாங்காவில்லை. இதற்கிடையில் அங்குவந்த காவலர் ஒருவர் அந்த நபரை தாக்கத் தொடங்கினார். மற்றொரு காவலரை பார்த்து இவனை அடியுங்கள் என ஆட்சியர் கூற அவரது தாக்கினர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர். மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் இணையத்தில் வைரலானதையடுத்து ரன்பீர் சர்மாவை மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார். இளைஞரை அறைந்ததற்கு ரன்பீர் சர்மா மன்னிப்பு கேட்டுள்ளார். “ அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றபோது எங்களிடம் இருந்து தப்பிச் செல்வதற்கு முயன்றார். அவரை பிடித்து விசாரித்ததில் எங்கே செல்கிறேன் என்பது குறித்து சரியான விளக்கம் அளிக்கவில்லை. முன்னுக்குபின் முரணாகவே பேசினார்.”எனக் கூறியுள்ளார்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Corona, Corona impact, Covid-19, Lockdown