சாதி வன்ம பேச்சு: சட்டீஸ்கர் முதலமைச்சரின் தந்தை கைது!

bhupesh baghel

ஒரு மகனாக எனது தந்தையை மதிக்கிறேன். ஆனால் ஒரு முதல்வராக எனக்கு சட்டம் தான் முக்கியம்.

  • Share this:
பிராமண சாதியினரை பற்றி அவதூறாக பேசியதாக சட்டீஸ்கர் மாநில முதல்வரின் 86 வயது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள சட்டீஸ்கர் மாநில முதல்வராக இருப்பவர் பூபேஷ் பாகெல், இவருடைய தந்தை நந்த் பாகெல் (வயது 86), பிராமண சமுதாயத்தினர் குறித்து அவதூறாக பேசிய பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலானது.

பிராமணர்கள் அந்நியர்கள், அவர்களை கிராமத்திற்குள் நுழைய விடக்கூடாது, நாட்டை விட்டே பிராமணர்களை விரட்ட வேண்டும் என்று பூபேஷ் பாகலின் தந்தை நந்த் பாகெல் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பிராமண இயக்கங்கள் நந்த் பாகெலும் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் குதித்தன. பேரணிகளும் நடத்தப்பட்டது.

இதனையடுத்து ராய்ப்பூரில் உள்ள தீன் தயாள் மற்றும் டிடி நகர் காவல் நிலையங்களில், சர்வ் பிராமண சமாஜ் என்ற பிராமண இயக்கத்தினர், நந்த் பாகெல் மீது சாதி வெறியை தூண்டுவதாக புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் நந்த் பாகெல் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஐபிசியின் 153 ஏ மற்றும் 505 ஏ ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த புகார்களையடுத்து முதல்வரின் தந்தையை காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவரை 15 நாட்களுக்கு சிறையிலடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Also Read: ‘அந்த முதல்வரின் பெயர் பினராயி விஜயன் இல்லை மு.க.ஸ்டாலின்!’ – வைரலாகும் மலையாள வீடியோ!

தந்தை கைது செய்யப்பட்டது குறித்து முதல்வர் பூபேஷ் பாகெலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ஒரு மகனாக எனது தந்தையை மதிக்கிறேன். ஆனால் ஒரு முதல்வராக எனக்கு சட்டம் தான் முக்கியம்.

குறிப்பிட்ட சாதியினர் குறித்து எனது தந்தை ஆட்சேபத்தக்க வகையில் கருத்துக்களை தெரிவித்திருப்பதாக அறிந்தேன், சமுதாய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அவர் பேசியிருக்கிறார், குறிப்பிட்ட சாதியினரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார், இதனால் நானும் மனவேதனை அடைந்துள்ளேன்.

Also Read:  ஆண்களுடன் இனி செக்ஸ் இல்லை – பெண்கள் புதுமையான போராட்டம்!

எனக்கும் என் தந்தைக்கும் இடையே கொள்கை வேற்றுமை இருப்பதை எல்லோரும் அறிவார்கள். எங்கள் இருவருக்குமான கொள்கைகள், அரசியல் வேற்றுமைகள் மாறுபட்டது. ஒரு தந்தையாக அவரை மதிக்கிறேன். ஆனால் ஒரு மாநில முதல்வராக என்னால் அவருடைய தவறுகளை மன்னிக்க முடியாது.

என்னுடைய அரசில் சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை, அது முதல்வரின் 86 வயது தந்தையாக இருந்தாலும் சரி” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: