மகனாக மதிக்கிறேன்- இருந்தாலும் மன்னிக்க முடியாது: தந்தை கைது குறித்து சத்தீஸ்கர் முதல்வர்!

சர்ச்சை பேச்சு

ஒரு மகனாக எனது தந்தையை மதிக்கிறேன்.ஆனால் ஒரு முதலமைச்சராக  சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அவருடைய கருத்துகள் மற்றும் தவறுகளை என்னால் மன்னிக்க முடியாது என்று பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சாதிய ரீதியாக அவதூறாக பேசிய விவகாரத்தில் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரின் தந்தை கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு மகனாக தனது தந்தையை மதிப்பதாகவும்,ஆனால் முதலமைச்சராக அவரது பேச்சை மன்னிக்க முடியாது என்று முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

  சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகலின் தந்தை நந்தகுமார், உத்தரப் பிரதேசத்தில் தான் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில்,பிராமணர்கள் அந்நியர்கள், அவர்களை கிராமத்திற்குள் நுழைய விடக்கூடாது, நாட்டை விட்டே பிராமணர்களை விரட்ட வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதையடுத்து  டெல்லியில் வைத்து அவரை கைது செய்த போலீசார், ராய்ப்பூர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

  பின்னர், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் நந்தகுமார் சிறையில் அடைக்கப்பட்டனர்.  முன்னதாக, தனது தந்தை கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்த பூபேஷ்பாகல்,  ‘ஒரு மகனாக எனது தந்தையை மதிக்கிறேன்.ஆனால் ஒரு முதலமைச்சராக  சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அவருடைய கருத்துகள் மற்றும் தவறுகளை என்னால் மன்னிக்க முடியாது; சட்டம் அனைவருக்கும் சமம்’ என்று கூறினார்.

  மேலும் படிக்க: பெண்கள் முன்னேற்றத்தில் அடுத்த மைல் கல்: என்.டி.ஏ.வில் பெண்களை அனுமதிக்க மத்திய அரசு முடிவு!


  இதனிடையே, நந்தகுமார் கைது செய்யப்பட்டிருப்பது சத்தீஸ்கரில் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான அமைப்பான சத்தீஸ்கர்ஹியா சர்வா சமாஜ், நந்தகுமார் கைதை கண்டித்து மிகப்பெரிய  போராட்டத்தை நடத்த ஆயத்தமாகி வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: