• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் லக்னோ விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா!

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் லக்னோ விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா!

 சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் லக்னோ விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா!

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் லக்னோ விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா!

சித்தாப்பூரில் தடுப்பு காவலில் உள்ள பிரியங்கா காந்தியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் லக்னோ விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

  • Share this:
    உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் வருகையை கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் பாதுகாப்புக்கு வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது. இதில் கார் மோதி நான்கு விவசாயிகள் பலியாகினர் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, நடந்த வன்முறையில் 2 பாஜக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து விவசாய அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பினர் கூறும்போது, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு பாதுகாப்புக்கு வந்த வாகங்களின் வரிசையில் மிஸ்ராவின் மகன் ஒரு காரை ஓட்டி வந்ததாகவும், அவரே விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகவும், நடந்த சம்பவத்துக்கு அமைச்சரின் மகனே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து, அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 8 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பதற்றத்தை குறைக்க லக்கிம்பூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, உத்தரப் பிரதேசம் லக்கிம்பூரில் உள்ள கேரி பகுதிக்குச் செல்ல முயன்ற பிரியங்கா காந்தியை போலீஸார் சீதாபூரில் தடுத்து நிறுத்தினர். அவரை அங்குள்ள விடுதி ஒன்றில் சுமார் 30 மணி நேரத்திற்கும் மேலாக தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

    இந்நிலையில், சிதாபூரில் தடுப்பு காவலில் உள்ள பிரியங்கா காந்தியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் லக்னோ விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.



    இதுதொடர்பாக அவர் கூறும்போது, சட்டவிரோதமாக நேற்றிலிருந்து சீதாபூரில் காலவரையின்றி தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்காவை தான் சந்திக்க விரும்பினேன். இதற்காக லக்னோ வருகை தந்தபோது, விமான நிலையத்தை விட்டு வெளியேற எனக்கு அனுமதி இல்லை என கூறுகின்றர் என்றார்.

    144 தடை உத்தரவு லக்கிம்பூரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், நான் அங்கு செல்லவில்லை. சீதாபூர் செல்கிறேன். அங்கு செல்வதில் என்ன பிரச்சனை என்று அவர் போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து, லக்னோவிலும் பெரும் கூட்டம் கூடுவதறகு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர் என்றார்.

    முன்னதாக, நேற்றை செய்தியாளர்களிடம் பேசிய அவர், லக்கிம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், லக்னோவில் எனது விமானம் தரையிறங்குவதில் என்ன சிக்கல் இருக்கிறது? ஏன் அனுமதிக்கக் கூடாது? மக்களின் உரிமை உ.பி.யில் ரத்து செய்யப்பட்டிருக்கிறதா, உத்தரப் பிரதேசத்துக்குச் செல்ல தனியாக நான் விசா வாங்க வேண்டுமா. ஏன் மக்கள் லக்கிம்பூர் செல்ல அனுமதிக்கப்படவில்லை?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: