சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் சாட்டையால் அடிவாங்கி நேர்த்திக் கடனை செலுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் ஜாஞ்சகிரி கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்ற போது முதலமைச்சர் பூபேஷ் பாகல் சாட்டையால் அடிவாங்கி நேர்த்திக் கடனை செலுத்தியதாக கூறப்படுகிறது. வடமாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்தநாள் கிருஷ்ணருக்காக கோவர்தன பூஜையில் ஈடுபடுவது பழக்கம்.
வட மாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாள், கிருஷ்ணருக்காக கோவர்தன பூஜையில் ஈடுபடுவது வழக்கம். கிருஷ்ண புராணத்தின்படி கோகுலவாசிகள் இந்திரனை வணங்காமல் கிருஷ்ணனின் பேச்சைக்கேட்டு கோவர்தன் குன்றை பூஜை செய்தனர். இதனால் கோபம் கொண்ட இந்திரன் சூறாவளிக்காற்றுடன் பெருமழையை பெய்வித்தார். கோகுலவாசிகளையும் பசுக்கூட்டத்தையும் கிருஷ்ணன் கோவர்தன மலையை குடையாகப் பிடித்துக் காத்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வடமாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாள் கோவர்தன பூஜை கொண்டாடப்படுகிறது.
#WATCH | Chhattisgarh Chief Minister Bhupesh Baghel getting whipped as part of a ritual on the occasion of Govardhan Puja in Durg pic.twitter.com/38hMpYECmh
— ANI (@ANI) November 5, 2021
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chattisgarh