ஹோம் /நியூஸ் /இந்தியா /

இட ஒதுக்கீட்டை 76 சதவீதமாக உயர்த்தி மசோதா - சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

இட ஒதுக்கீட்டை 76 சதவீதமாக உயர்த்தி மசோதா - சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல்

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல்

சத்தீஸ்கர் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டை 76 சதவீதத்திற்கு உயர்த்தி அம்மாநில அரசு சட்டப்பேரவையில் மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chhattisgarh, India

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேஷ் பகேல் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை 76 சதவீதத்திற்கு உயர்த்தி சட்டப்பேரவையில் மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.

இதற்காக இரு மசோதாக்களை சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதம் சுமார் 5 மணிநேரம் நடைபெற்றது. ஏற்கனவே, 2012ஆம் ஆண்டில் பாஜக அரசு பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி கொண்டுவந்த சட்டத்தை அம்மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மொத்தமாக இடஒதுக்கீடு அளவு 50 சதவீதத்தை தாண்டி இருக்கக் கூடாது என்பதை காரணம் காட்டி உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தீர்வு காணும் விதமாகவே சத்தீஸ்கர் அரசு புதிய சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.

அதன்படி, சத்தீஸ்கரில் எஸ்டி பிரிவினருக்கு 32 சதவீதம், எஸ்சி பிரிவினருக்கு 13 சதவீதம், ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள உயர் வகுப்பினருக்கு 4 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கி மொத்தம் 76 சதவீதம் கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்று மசோதாவில் பகுத்துள்ளது.

இதையும் படிங்க: டெல்லி மதுபான கொள்கை ஊழல் - தெலங்கானா முதலமைச்சர் மகளுக்கு சிபிஐ நோட்டீஸ்

இந்த மசோதா நேற்று சட்டப்பேரவையில் நிறைவேறியது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் 76 சதவீத இட ஒதுக்கீடு சட்டமாக அமலாகும். இது சட்டமானால் நாட்டிலேயே அதிக சதவீத இட ஒதுக்கீடு கொண்ட மாநிலமாக சத்தீஸ்கர் திகழும்.

First published:

Tags: Bhupesh baghel, Chattisgarh, Reservation