சென்னை உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் காணாமல் போகும்: நிதி ஆயோக்

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தால் அதிக செலவு பிடிக்கும் என்பதால், மழைநீரை சேமிக்க கவனம் செலுத்த வேண்டும்.

சென்னை உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் காணாமல் போகும்: நிதி ஆயோக்
அவ்வப்போது குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், உடைப்புகள், வீணாகும் குடிநீர் பற்றி, 94458 02145 என்ற மொபைல் போன் எண்ணில் தெரிவிக்கலாம் என்று, குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:48 PM IST
  • Share this:
சென்னை உள்ளிட்ட 21 நகரங்களில் அடுத்த ஆண்டில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் காணாமல்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக நிதிஆயோக் அமைப்பின் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், நிலத்தடி நீர் மட்டம் குறித்து நிதிஆயோக் அமைப்பு ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், மற்ற நகரங்களைவிட சென்னையில் சிறந்த நீர் ஆதாரங்கள் மற்றும் மழைப்பொழிவு இருந்தபோதிலும், 3 ஆறுகள், 4 நீர் நிலைகள், 5 ஈர நிலங்கள், 6 வனப்பகுதிகள் ஆகியவை தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளது.


சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 21 நகரங்களில் அடுத்த ஆண்டில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் இல்லாத நிலை ஏற்படும்.

மேலும், 2030-ம் ஆண்டில் 40 சதவீத மக்களுக்கு குடிநீரே கிடைக்காத நிலை ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தால் அதிக செலவு பிடிக்கும் என்பதால், மழைநீரை சேமிக்க கவனம் செலுத்த வேண்டும்.நீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்ய அரசும், நாட்டு மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க:
First published: June 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading