ஹோம் /நியூஸ் /இந்தியா /

Exclusive: விரைவில் தொடங்கும் சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் சேவை.. கட்டணம், பயணம் நேரம் உள்ளிட்ட பிரத்தியேக தகவல்கள் இதோ!

Exclusive: விரைவில் தொடங்கும் சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் சேவை.. கட்டணம், பயணம் நேரம் உள்ளிட்ட பிரத்தியேக தகவல்கள் இதோ!

வந்தே பாரத் ரயில்

வந்தே பாரத் ரயில்

சென்னையில் அதிகாலை 5.50 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில் ஜோலார்பேட்டை, பெங்களூரு வழியாக 6 மணிநேரத்தில் மைசூரை சென்றடைகிறது.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Bangalore [Bangalore], India

  நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத்  சென்னை மற்றும் மைசூருக்கு இடையே வரும் நவம்பர் 10ஆம் தேதி தொடங்குகிறது. நாட்டின் 5ஆவது வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி மைசூரில் தொடங்கி வைக்கிறார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸானது Train 18 என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் ஒரு செமி -ஹைஸ்பீட், இன்டர்சிட்டி, எலெக்ட்ரிக் மல்டிபிள்-யூனிட் ட்ரெயின் ஆகும்.

  இந்த திட்டம் குறித்து நியூஸ் 18க்கு மைசூரு எம்பி பிரதாப் சிம்மா அளித்த பேட்டியில், வந்தே பாரத் இந்தியாவின் அதிநவீன அதிவேக ரயில் திட்டத்தின் சிறந்த உதாரணம். சென்னை - மைசூர் இடையே பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இந்த அதிவேக ரயில் குறைந்த நேரத்திலேயே அதிவேகத்தை எட்டும் தன்மை கொண்டது என்றார்.

  இந்திய ரயில்வேயால் இயக்கப்படும், இந்த வந்தே பாரத் சிறப்பு ரயில் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள ரயில்களிலேயே அதிக சிறப்புகளை கொண்ட ரயிலாகும்.முழுவதும் ஏசி வசதிகொண்ட கோச்களையும், நவீன சொகுசு வசதிகொண்ட இருக்கைகளையும் கொண்டாதாகும்.இந்த ரயிலில் எக்சிக்யூடிவ் கிளாஸ் மற்றும் எக்கனாமி கிளாஸ் என இரண்டு வகுப்புகள் உள்ளன. எக்சிக்யூடிவ் கிளாஸில் உள்ள இருக்கைகள் 180 டிகிரிக்கு திரும்பும் தன்மை கொண்டது. அதேபோல், எக்கனாமி வகுப்பில் உள்ள இருக்கைகள் சொகுசு கார்களில் உள்ள இருக்கை போல் முன்புறம் நகர்த்திக்கொள்ளும் வசதி கொண்டது. இந்த ரயில் சென்னை, பெங்களூரு, மைசூரு வழித்தடத்தில் புதன்கிழமை தவிர மற்ற நாள்களில் இயக்கப்படும். இதில் மொத்தம் 16 பெட்டிகளும் அதில் மொத்தம் ஆயிரத்து 128 இருக்கைகளும் உள்ளன.

  நியூஸ் 18க்கு கிடைத்த தகவலின் படி, இந்த ரயிலில் மைசூர் மற்றும் சென்னை இடையே பயணிக்க எக்கனாமி அல்லது ஏசி சேர்கார் வகுப்பில் ரூ.921 கட்டணமாகும். இதுவே எக்சிக்யூடிவ் வகுப்பில் பயணிக்க ரூ.1,880 கட்டணமாகும்.அதேபோல், மைசூரு மற்றும் பெங்களூரு இடையே பயணிக்க எக்கனாமி வகுப்பில் ரூ.368 கட்டணமும், எக்சிக்யூடிவ் வகுப்பில் ரூ.768 கட்டணமும் வசூலிக்கப்படும். சென்னை-மைசூரு இடையேயான 504 கிமீ தூரத்தை 6 மணிநேரம் 40 நிமிடங்களில் இந்த ரயில் கடக்கும். சதாப்தி ரயிலை விட இந்த வந்தே பாரத் ரயிலில் 39 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் ரிசர்வேஷன் மற்றும் கேட்ரிங் கட்டணமும் அடங்குகிறது.

  அதேபோல், இதே திறன் கொண்ட மற்ற ரயில்கள் 1,400 முதல் 1,500 டன்கள் எடை கொண்டவை. ஆனால், இந்த வகை வந்தே பாரத் ரயில் 850 டன் எடை கொண்டவை. அதேபோல், பல புல்லட் ரயில்கள் 58 நொடிகளில் 100mph வேகத்தை தொடும். ஆனால், வந்தே பாரத் ரயில்கள் அதை விட வேகமாக 52 நொடிகளிலேயே இந்த வேகத்தை தொட்டுவிடும்.

  பொதுவாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் இயங்கியது. அதேபோல், இந்த வந்தே பாரத் ரயில் விமான பயணத்தை விட செலவு மற்றும் நேரம் குறைவானது ஆகும். பயண இடத்திற்கு 6 மணிநேரத்தில் இந்த ரயில் குறைந்த செலவில் செல்கிறது. மேலும் நவீன வசதிகள் கொண்ட இந்த ரயிலில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் 2.0 என பெயரிடப்பட்ட ரயிலில் டிசிஏஎஸ் எனப்படும் “ட்ரெயின் கொல்லிஷன் சிஸ்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  இதனை “கவச்” என்றும் அழைக்கிறார்கள், அதாவது கவசம். ஆபத்து நேரங்களில் மின் விளக்குகள் தொடர்ந்து மூன்று மணி நேரம் வரை எரிவதற்கு தேவையான பேட்டரியும் ரயில் பெட்டிகளின் இணைக்கப்பட்டுள்ளது.

  சென்னையில் இருந்த மைசூரு செல்லும் வந்தே பாரத் ரயிலின் எண் 20607 என்றும் மைசூரில் இருந்து சென்னை செல்லும் ரயிலின் எண் 20608 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகாலை 5.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், ஜோலார்பேட்டை வழியாக பெங்களூருவுக்கு காலை 10.25க்கு செல்கிறது. அங்கு 5 நிமிடம் ஹால்ட் செய்யப்பட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 12.30 மணிக்கு மைசூரு வந்தடைகிறது.

  இந்த வழித்தடத்தில் வரும் நவம்பர் 5ஆம் தேதி ஒரு சோதனை ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இதுவரை நாட்டில் 4 வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். முதலாவதாக டெல்லி - வாரணாசி வந்தே பாரத் ரயில், இரண்டாவதாக டெல்லி - ஸ்ரீவைஷ்னவ் தேவி கோயில் வந்தே பாரத் ரயில், மூன்றாவதாக காந்தி நகர் - மும்பை வந்தே பாரத் ரயில், நான்காவதாக டெல்லி - அம் அந்தௌரா வந்தே பாரத் ரயில் திட்டங்கள் இதுவரை தொடங்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: ஃபுட் சேலஞ்ச்.. சமோசா சாப்பிட்டால் ரூ.51,000 பரிசு.. மிரள வைக்கும் போட்டி!

  கர்நாடகாவில் நவம்பர் 11ஆம் தேதி ஐந்தாவது வந்தே பாரத் திட்டத்தை தொடங்கி வைக்கும் பிரதமர், அன்றைய தினமே சுமார் 2.5 கோடி விமானப் பயணிகளைக் கையாளும் வகையில் 5,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் (Kempegowda International Airport) இரண்டாவது டெர்மினலையும் திறந்து வைக்கிறார். அன்றைய தினமே (நவம்பர் 11) ஏர்போர்ட்டில் 108 அடி உயர கெம்பேகவுடாவின் வெண்கலச் சிலையை மோடி திறந்து வைக்கிறார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Chennai, Mysuru, PM Modi, Vande Bharat