தெலங்கானாவில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்த விபத்துக்குள்ளான நிலையில், 2000 பைக்குகளை திரும்பப் பெறுவதாக பைக்கை தயாரித்த நிறுவனம் அறிவித்துள்ளது. தொடர் விபத்துகளால் எலக்ட்ரிக் பைக்கின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை வீட்டில் வைத்த சார்ஜ் செய்தபோது, வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 80 வயது முதியவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தியதாக பைக்கை தயாரித்த ப்யூர் ஈவி PURE EV மீது உயிரிழந்த முதியவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து 2000 பைக்குகளை திரும்பப் பெறுவதற்கு ப்யூர் ஈவி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது- வாடிக்கையாளர்கள் தொடர்பான தகவல்களை ஆய்வு செய்தோம். அதில் விபத்துக்குள்ளான நபர் எங்களிடம் இருந்து நேரடியாக பைக்கை வாங்கினார் என்பதற்கான ஆவணங்கள் இல்லை. ஒருவேளை எங்களது வாடிக்கையாளரிடம் இருந்து செகண்ட் ஹேண்டாக வாங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
எங்கள் மீதான போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். சென்னை மற்றும் தெலங்கானாவில் எங்கள் பைக்குகள் விபத்தை சந்தித்துள்ளன. இதன் அடிப்படையில் 2 ஆயிரம் பைக்குகளை திரும்பப் பெறுவதற்கு முடிவு செய்துள்ளோம். ETRANCE+ மற்றும் EPLUTO 7G ஆகிய மாடல்களில் 2 ஆயிரம் பைக்குகள் திரும்பப் பெறப்பட்டு பரிசோதனை செய்யப்படும்.
வாகனங்களின் பேட்டரி மற்றும் சார்ஜர்களில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்யப்படும். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பக்குத்தான் ப்யூர் ஈவி நிறுவனம் முக்கியத்துவம் அளிக்கிறது. வாகன பாதுகாப்பு தொடர்பாக கூடுதல் பரிசோதனைகளை ப்யூர் ஈவி மேற்கொள்ளும்.
இவ்வாறு ப்யூர் ஈவி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலம் எரிபொருளுக்கு ஆகும் செலவை மிச்சப்படுத்துவதற்காக எலக்ட்ரிக் பைக்குகள் வாங்கப்படுகின்றன. இதில் விலை குறைந்தது முதல் அதிக விலைகொண்ட பைக்குகளும் விபத்தை சந்தித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலக்ட்ரிக் பைக் நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electric bike