ஒடிசாவில் நிகழ்ந்த விமான விபத்தில் சென்னை மாணவி உயிரிழப்பு

ஒடிசாவில் நிகழ்ந்த விமான விபத்தில் சென்னை மாணவி உயிரிழப்பு
(படம்: ANI)
  • Share this:
ஒடிசாவில் விமானப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில், சென்னை மாணவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த 20 வயதான அனீஸ் ஃபாத்திமா, ஒடிசா மாநிலம் பிர்சாலாவில் உள்ள அரசு விமான பயிற்சி கல்வி நிறுவனத்தில் பயின்று வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை சிறிய ரக விமானப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருத போது, திடீரென விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் அனீஸ் ஃபாத்திமா மற்றும் விமானி ஒருவர் உள்பட இருவர் உயிரிழந்தனர். ஃபாத்திமாவின் உடல் தமிழகம் கொண்டுவரப்படுகிறது.


Also see:

 
First published: June 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading