சென்னை: ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக சென்று காணாமல்போன 9 மீனவர்கள் மீட்பு..

சென்னையில் இருந்து மீன்பிடி தொழிலுக்கு சென்று காணாமல் போன 9 மீனவர்கள் 55 நாட்களுக்கு பின்னர் மியான்மர் கடற்படையால் மீட்கப்பட்டனர்.

சென்னை: ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக சென்று காணாமல்போன 9 மீனவர்கள் மீட்பு..
ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக சென்று காணாமல்போன 9 மீனவர்கள் மீட்பு
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2020, 1:10 PM IST
  • Share this:
காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 23-ஆம் தேதி ரகு, பாபு, முருகன் உட்பட 9 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக சென்றனர். 10 நாட்களில் கரை திரும்ப வேண்டிய மீனவர்கள் 13 நாட்கள் ஆகியும் கரை திரும்பாததால் அவர்களை கடலோர காவல் படையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு மியான்மர் கடல் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த 9 மீனவர்களையும் அந்நாட்டு கடற்படையினர் மீட்டனர். அதில், இருவரை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, விசைப்படகில் டீசல் காலியாகி விட்டதாலும், தகவல் தொடர்பு சாதன இணைப்பும் துண்டிக்கப்பட்டதாலும் நடுக்கடலில் தத்தளித்ததாக மீனவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க...அதிகரிக்கிறது தொற்று அபாயம்.. விடுமுறை தினமான நேற்று பொது இடங்களில் குவிந்த மக்கள் கூட்டம்...




அதன்பின் படகு உரிமையாளரை தொடர்பு கொண்டு தாங்கள் மீட்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளனர். இதனிடையே, மியான்மரில் உள்ள 9 மீனவர்களை உடனே தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

 
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading