டான்சானியா நாட்டிலிருந்து இந்தியா திரும்பிய
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
கொரோனாவால் மகாராஷ்ராஷ்டிர மாநிலம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக மும்பை மற்றும் தாராவி பகுதியில் ஏற்பட்ட பாதிப்பால், பொதுமக்கள் பெரும் இழப்பை சந்தித்தனர். இந்நிலையில் தாராவி பகுதியில் இன்று முதல் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Also Read :
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 25-ஆக உயர்வு... கட்டுப்பாடு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம்
தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் டான்சானியாவில் இருந்து மும்பை திரும்பியுள்ளார். அவர் தற்போது செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நபர் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, குஜராத்தில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Also Read :
ஒமைக்ரான் பரவல்: மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுரை!
இவர்களில் ஒருவர் கடந்த 4-ம்தேதி ஜிம்பாப்வே நாட்டிலிருந்து குஜராத்தின் ஜாம் நகருக்கு வந்துள்ளார். அவருக்கு முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, ஒமைக்ரான் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தற்போது அவருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதியாகியுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
இன்னொருவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஜாம் நகருக்கு வந்தவர். அவர் கொரோனா தடுப்பூசிகள் 2 டோசும் செலுத்தியிருந்த நிலையில் அவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவருடன் வந்திருந்த 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.