தேசிய பங்குச் சந்தையில் முறைகேடு? ஒரு மாதத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மாதிரிப் படம்

இதை விசாரித்த செபி, தேசிய பங்குச்சந்தைக்கு சுமார் 700 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதித்தது. சிபிஐயும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தேசிய பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க தேசிய பங்குச்சந்தைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பங்குச் சந்தையில் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்கள் பற்றிய விவரங்களை குறிப்பிட்ட சில நிறுவனங்கள் சட்டவிரோதமாக பெற அதிகாரிகள் அனுமதித்ததாக செபிக்கு புகார் வந்தது. இதை விசாரித்த செபி, தேசிய பங்குச்சந்தைக்கு சுமார் 700 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதித்தது.

சிபிஐயும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. ஆனால், செபியும், சிபிஐயும் முறையாக விசாரிக்கவில்லை என்று சென்னை நிதி சந்தை மற்றும் பொறுப்புடைமை என்ற அமைப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், நவம்பர் 11-ம் தேதிக்குள் மத்திய கம்பெனி விவகாரத்துறை, செபி, சிபிஐ, அமலாக்கப்பிரிவு, தேசிய பங்குச் சந்தை ஆகியன பதிலளிக்க உத்தரவிட்டது.

Also see:

Published by:Karthick S
First published: